Shadow

Tag: ஆல்ஃபா திரைப்படம்

ஆல்ஃபா விமர்சனம்

ஆல்ஃபா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆல்ஃபா என்பது தலைமை பொறுப்பில் உள்ள ஆளுமையைக் குறிக்கும் சொல். குறிப்பாக, தனது கூட்டத்தில் தலைமைப் பதிவு வகிக்கும் மிருகத்தை அப்படிச் சொல்வார்கள். படத்தின் மையக்கருவும் அதுதான். ஆல்ஃபா என்ற அங்கீகாரம் தரப்படுவதல்ல, உறுதியை நிரூபித்துப் பெறப்படுவது. 20000 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில், ஓர் இனக்குழு காட்டெருது (Bison) வேட்டைக்குச் செல்கிறது. அக்குழுவின் தலைவன் தன் மகன் வேகேடாவை வேட்டைக்கு அழைத்துச் செல்கிறான். தன் மகனுக்கு அவர் சொல்லும் பாடம், தலைவர் பதவி தரப்படுவதல்ல, சக்தியை நிரூபித்துப் பெறப்படுவது. கேடாவின் சிறு பலவீனத்தால் அவன் காட்டெருதால் தூக்கி வீசப்படுகிறான். மலை முகட்டில் இருந்து, இடையில் பாறையில் விழும் கேடாவை அவனது குழு இறந்துவிட்டதாக நினைத்துவிடுகிறது. அவர்களைப் போலவே வழுக்கைத் தலை கழுகொன்றும் நினைத்து கேடாவின் இரத்தம் வழியும் வாயைக் கொத்துகிறது. கழுகின் தலையைப் பிடித்து மல...
ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு

ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஐரோப்பாவில், 20000 ஆண்டுகளுக்கு முன், காட்டெருதை வேட்டையாட ஒரு குழு கிளம்புகிறது. அக்குழுவில் ஓர் இளைஞன் முதன்முறையாக இணைகிறான். வேட்டையின் பொழுது நிகழும் விபத்தொன்றில், அவ்விளைஞன் இறந்துவிட்டான் எனக் கருதி அவனை விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்கிறது அவ்வேட்டைக்குழு. உடலாலும் மனதாலும் போராடிக் கொண்டிருக்கும் அவ்விளைஞனுக்கு வழித்துணையாக, தன் கூட்டத்தில் இருந்து வழி தவறிவிடும் ஓர் ஓநாய் சேருகிறது. அந்த விநோத நட்பு வழியில் ஏற்படும் எண்ணற்ற ஆபத்துகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது. இளைஞன் தன் குழுவுடனும், ஓநாய் தனது கூட்டத்துடனும் இணைந்ததா என்பதே ஆல்ஃபா படத்தின் கதை. 96 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படத்தில் கோடி ஸ்மிட் – மெக்பீ (Kodi Smit- McPhee), லியானோர் வரேலா (Leonor Varela), ஜென்ஸ் ஹல்டன் ( Jens Hultén) மற்றும் யோஹனஸ் ஹெளகுர் யோஹனசன் (Jóhannes Haukur Jóhannesson)ஆகியோர் நடித்துள்...