Shadow

ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு

Alpha-in-Tamil

ஐரோப்பாவில், 20000 ஆண்டுகளுக்கு முன், காட்டெருதை வேட்டையாட ஒரு குழு கிளம்புகிறது. அக்குழுவில் ஓர் இளைஞன் முதன்முறையாக இணைகிறான். வேட்டையின் பொழுது நிகழும் விபத்தொன்றில், அவ்விளைஞன் இறந்துவிட்டான் எனக் கருதி அவனை விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்கிறது அவ்வேட்டைக்குழு.

உடலாலும் மனதாலும் போராடிக் கொண்டிருக்கும் அவ்விளைஞனுக்கு வழித்துணையாக, தன் கூட்டத்தில் இருந்து வழி தவறிவிடும் ஓர் ஓநாய் சேருகிறது. அந்த விநோத நட்பு வழியில் ஏற்படும் எண்ணற்ற ஆபத்துகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது. இளைஞன் தன் குழுவுடனும், ஓநாய் தனது கூட்டத்துடனும் இணைந்ததா என்பதே ஆல்ஃபா படத்தின் கதை.

96 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படத்தில் கோடி ஸ்மிட் – மெக்பீ (Kodi Smit- McPhee), லியானோர் வரேலா (Leonor Varela), ஜென்ஸ் ஹல்டன் ( Jens Hultén) மற்றும் யோஹனஸ் ஹெளகுர் யோஹனசன் (Jóhannes Haukur Jóhannesson)ஆகியோர் நடித்துள்ளனர்.

ஐஸ்லாந்து, வான்கோவர், ட்ரம்ஹெல்லர், பேட்ரிஷியா ஆல்பர்டாவில் இருக்கும் டினோசார் ப்ரொவன்ஷியல் பார்க் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மார்டின் (Martin Gschlacht) ஒளிப்பதிவு செய்ய, ஜோசப் எஸ். டிபீசி (Joseph S. DeBeasi) இசையமைத்துள்ளார். எழுதி இயக்கியுள்ளதோடு தயாரிப்பிலும் பங்கு பெற்றுள்ளார் ஆல்பர்ட் ஹுஸ் (Albert Hughes).

ஆகஸ்ட் 24 ஆம் தேதி சோனி பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.