Shadow

Tag: இயக்குநர் ஜெயவேல் முருகன்

வருணன் விமர்சனம் | Varunan: God of Water review

வருணன் விமர்சனம் | Varunan: God of Water review

சினிமா, திரை விமர்சனம்
அய்யாவு, ஜான் ஆகிய இருவரும் தங்களுக்குள்ளான புரிதலில், ஒரே ஏரியாவில் பிரச்சனையின்றி தண்ணீர் கேன் வியாபாரம் செய்கின்றனர். ஜானின் மச்சான் தண்ணீர் கேனில் சுண்டக்கஞ்சி விற்க, போலீஸ் ஜானின் வியாபாரத்தை முடக்குகிறது. பின், அந்தப் போலீஸே தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஜானின் பங்குதாரராக, பிரச்சனையின்றி நடந்த வந்த தண்ணீர் கேன் வியாபாரத்தில் போட்டியும் சண்டையும் நுழைகிறது. அய்யாவுவிடம் வேலை செய்யும் தில்லையும் மருதுவும், ஜானின் மச்சான் டப்பாவின் கோபத்திற்கு ஆளாகின்றனர். தில்லையை சிட்டு எனும் பெண் காதலிக்க, மருதுவை அக்னி எனும் பெண் காதலித்துத் திருமணம் புரிகிறார். தில்லையாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷும், மருதுவாக பிரியதர்ஷனும், சிட்டுவாக கேப்ரியலாவும், அக்னியாக ஹரிப்ரியாவும் நடித்துள்ளனர். அனைவரும் மிக இளமையாக உள்ளனர். ஒரு தசாப்தத்திற்கு முன் உருவாகியுள்ள படம். அய்யாவுவாக ராதாரவியும், ஜானாகச் சரண்ராஜும், க...

வருணன் – தண்ணீரின் அவசியமும் சாபமும்

சினிமா, திரைச் செய்தி
யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி, சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'வருணன் - காட் ஆப் வாட்டர்’ ஆகும். 'நீரின்றி அமையாது உலகு' எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகை கேப்ரியல்லா, ''வருணனைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை வைத்து எந்தவித டிராமாவும் இல்லாமல் அழகான சினிமாவை உருவாக்கி இருக்கிறோம். நாம் அனைவருக்கும் தண்ணீர் எவ்வளவு அவசியம் என்று தெரியும், ஆனாலும் தெரியாதது போல் இருக்கிறோம். இந்த வருணன் படத்தின் மூலம் தண்ணீருடைய அவசியம் பற்றி அனைவருக்கும் தெரியவரும். இந்தப் படத்தைப் பொழுதுபோக்குடன் இயக்குநர் சொல்லி...