பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களும்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 26
நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தை சிலர் துன்பங்களும் சிக்கல்களும் நிறைந்ததெனக் கூறுவர். ஆனால் நலமும் கேடும் கலந்து காணப்படுவதே இவ்வுலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் உண்டு. உண்மை யாதெனில், நாம் வெளியுலகில் காணும் கேடுகள் எல்லாம் நமது எண்ண விருத்திகளின் பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களுமே. புண்பட்ட மனமுள்ளவர்களுக்கு கேடுகள் வரினும் அவை கெடுதி நிறைந்தவையாகத் தென்படுவதில்லை.
சிறு நேரத்து இன்பத்தை அடைவதற்கு பல துன்பங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை இருக்குமளவுக்கு மனிதனுக்கு துன்பமும் இருக்கும். ஆசை அறுபடுமளவுக்கு அமைதி உண்டாகிறது. இந்திரியங்களை வெல்லாத வரை, மனதை அடக்கி ஆள இயலாதவரை, துன்பங்கள் குறைவதில்லை.
நாம் நம்மைப் பார்த்துக் கொள்வதெல்லாம் அழிந்து போகும் உடலின் கோணத்திலிருந்தேயொழிய, அழிவற்ற ஆத்மாவின் நோக்கில் அல்ல. ஆகையினால் தான் உட...