நரகம்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 11பிரம்மஞானிகள் (Theosophists) சூட்சும உலகின் முற்பகுதி காமலோகம் ஒன்றும் அதைக் கடந்தபின்னரே சாந்தி நிறைந்த சூட்சும உலகின் இறுதிப்பகுதிக்கு மனிதனால் செல்ல மடியும் என்றும் கூறுகிறார்கள். காமலோகத்தையே நால்வேதங்களும் "பிதிர்லோகம்" என்றும் பிரேதலோகம் என்றும் குறிப்பிடுவதாகவே அவர்கள் கருதுகிறார்கள். காமலோகம் ஏழுபடி நிலைகளைக் கொண்டதெனக் கூறப்படுகிறது.காமலோகத்திலிருந்து விடுபட்டவுடன் மனிதன் சூட்சும உலகின் இறுதிநிலையாகிய "தேவஸ்தான்" என்னும் சூட்சும தளத்துக்குச் சென்று அங்கு சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறான் என்பது அவர்கள் கருத்து. இந்துவேதங்கள் "பிரம்மலோகம்" என்றும் "ஹிரண்யலோகம்" என்றும் குறிப்பிடுவது தேவஸ்தானையே.காமலோக தத்துவத்தையெ கிரேக்கபுராண வழக்கில் பாதாளம் (Hades) என்றும் கத்தோலிக்க சமய மரபில் பாபத்தைப் போக்குமிடம் (Purgatory) என்றும் வர்ணிக...