Shadow

Tag: கபிலன் வைரமுத்து

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா, திரைச் செய்தி
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீ...
விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து

விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து

சினிமா, திரைத் துளி
பல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்து, கவண் படம் மூலமாகத் திரைக்கதை எழுத்தாளரானார். தற்போது இவர், அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி, ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். விவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ''இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியது மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது பங்களித்ப்பை அளித்துள்ளேன். சினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான். பாடலாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குநர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து, வேண்டிய சுதந்திரத்தை அளித்ததே காரனம். அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும். இப்பட...
கவண் விமர்சனம்

கவண் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சமமற்ற இருவருக்குள் நடக்கும் சண்டைக்கு, பைபிளில் வரும் கோலியத், டேவிட் கதையை உதாரணம் காட்டுவார்கள். சிறுவனான டேவிட் உண்டிவில் கொண்டு ஆஜானபாகு கோலியத்தை வீழ்த்திவிடுவான். அப்படி, வில்லன் ஆகாஷ்தீப்பின் கார்பொரேட் டி.வி. நிறுவனமான ஜென் 1-ஐத் தகர்க்கிறார் முத்தமிழ் டி.வி. நிருபரான விஜய்சேதுபதி. படத்தின் சர்ப்ரைஸ் விஷயமென்றால், அது பவர் ஸ்டார் வரும் காட்சிதான். முதல் முறையாக, அவர் தோன்றும் காட்சியொன்று ரசிக்கும்படியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் பேசும் வசனமும் துணை புரிந்துள்ளது. எழுத்தாளர்கள் சுபா மற்றும் கபிலன் வைரமுத்துவின் வசனங்கள் படத்திற்கு உதவி செய்துள்ளன. ஆனால், டி.ராஜேந்தர் தான் வழக்கம் போல் இடம் பொருள் ஏவல் பிரக்ஞையின்றி அடுக்கு மொழியில் கடுப்பேற்றுகிறார். எனினும் க்ளைமேக்ஸில், 'வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி' என டேபிளைத் தட்டிக் கொண்டே பாடும் பொழுது திரையரங்கில் ...
கலக்கப் போகும் கவண்

கலக்கப் போகும் கவண்

சினிமா, திரைத் துளி
சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என மனிதனின் வாழ்வில் நிகழும் அத்தனையையும் தொடும் சுவாரசியமாகப் படமாக இருக்கும் "கவண்". இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று டி.ராஜேந்தரும் நடித்துள்ளார். அவரது அடுக்குமொழி வசனமும், அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. டி.ஆர் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கப் போகின்றதாம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். மேலும், பாண்டியராஜன், விக்ராந்த், 'அயன்' ஆகாஷ், போஸ் வெங்கட், 'நண்டு' ஜகன், பவர் ஸ்டார் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 'கனா கண்டேன்' முதல் இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் இரட்டை எழுத...