Shadow

Tag: கமல் ஹாசன்

“இது, பாரத் ரத்னா இளையராஜாவின் படம்” – கமல் ஹாசன்

“இது, பாரத் ரத்னா இளையராஜாவின் படம்” – கமல் ஹாசன்

சினிமா, திரைச் செய்தி
கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். நடிகர் கமல்ஹாசன், “எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்பதே எனக்குப் புரியவில்லை. இது மிக நீண்ட ஒரு பயணம். எங்களுக்கு இடையிலான நட்பு என்பது மிகப் பெரியது. இவர் தான் இளையர...
ஆளவந்தான் விமர்சனம்

ஆளவந்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘இதயம் பேசுகிறது’ இதழில், 80களில் “தாயம்” என்ற பெயரில் கமல் எழுதிய தொடர், 2001 இல் ‘ஆளவந்தான்’ ஆகத் திரையேற்றம் கண்டது. திரைக்கதை, வசனத்தைக் கமல் எழுத, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். வெளியான போது 178 நிமிடங்கள் கால அளவினைக் கொண்ட படத்தைத் தற்போது 122 நிமிடங்களாகச் சுருக்கி, 4K தெளிவுத்திறனில் (resolution) வெளியிட்டுள்ளனர். சித்தி கொடுமைக்கு உள்ளாகும் விஜயும் நந்துவும் இரட்டையர்கள். விஜயை, அவரது மாமா இராணுவப்பள்ளியில் சேர்க்க, தந்தையுடன் தங்கும் நந்துவோ சித்தியைக் கொன்ற குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். இராணுவ அதிகாரியாகும் விஜய், தேஜஸ்வினியைக் காதலித்துத் திருமணம் புரிகிறார். சித்தி தான் தேஜஸ்வினியாக வந்துள்ளார் என நம்பும் மனச்சிதைவுடைய (schizopernia) நந்து, தேஜஸ்வினியைக் கொன்று விஜயைக் காப்பாற்ற நினைக்கிறான். வேட்டையாடப் பயிற்சியெடுத்த விஜய் தேஜஸ...
கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்

கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்

இது புதிது, புத்தகம்
சிலோன் வானொலியின் B.H.அப்துல் ஹமீது எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ எனும் நூல், டிசம்பர் 18 ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை JMR Events கவனித்துக் கொள்ள, நிகழ்ச்சியை வழங்கியது பிளாக் ஷீப் டிவி. மதன்ஸ்' பேண்ட்-டின் இசை கச்சேரியில், பெரும்பாலும் கமலின் படங்களில் இருந்து ஒரு கலவையான பாடல்களின் தொகுப்பாகவே பாடப்பட்டது, நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம். கமல்ஹாசன் தனது உரையில், அப்துல் ஹமீதின் தூய்மை மற்றும் தமிழை உச்சரிப்பதில் முழுமை பெற்றிருப்பதைக் குறிப்பிட்டார். அப்துல...
“ஓ பெண்ணே” – தேவி ஸ்ரீ பிரசாதின் சுயாதீன பாடல்

“ஓ பெண்ணே” – தேவி ஸ்ரீ பிரசாதின் சுயாதீன பாடல்

இது புதிது
T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். இந்தப் பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ்ப் பதிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்தப் பாடலின் ஹிந்திப் பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டு இருந்தார். இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பு திரு. நாகார்ஜூனாவால் வெளியாக இருக்கிறது. வெளியீட்டு விழாவினில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்கக் கூடியவராக எப்போதும் இருக்கிறார். இந்த சர்வதேச பாடலுக்கான ஐடியாவை முதன் முதலில் அவரிடம் ...
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தொடரும் விக்ரம் படத்தின் சாதனை

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தொடரும் விக்ரம் படத்தின் சாதனை

சினிமா, திரைத் துளி
விக்ரம் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8, 2022 அன்று பிரத்தியேகமாக வெளியானது. வாரயிறுதியில் அதிக பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற புதிய சாதனையையும் விக்ரம் படம் படைத்துள்ளது. இந்த மெகா ஆக்‌ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க பார்வையாளர்களுக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது. கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற கூடுதல் மொழிகளிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் திரையிடப்பட்டுள்ளது. இது அந்தந்த மொழி பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம் மற்றும் மனத...