சிவபக்த அகோரியாக ஜாக்கி ஷெராப்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப்.
"இதில் நான் அகோரியாக நடிக்கிறேன். இயக்குநர் கஸ்தூரிராஜா கதையைச் சொன்னவுடன் இது எனக்குப் புது மாதிரியான கேரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓகே சொன்னேன்.
ஆரண்ய காண்டம், மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம். என் உருவத்தை மட்டும் அல்ல என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும்.
இயக்குநர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன். நானாவது இந்தக் கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன். ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை ட்ரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார்.
சிவபக்த அகோரியாக நடிக்கிறேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும், எல்லோரையும் அழிக்க நி...