Shadow

Tag: காஷ்மீரா பர்தேஷி

வரலாறு முக்கியம் விமர்சனம்

வரலாறு முக்கியம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கேரளப் பெண்ணைக் காதலித்து மணம் முடிப்பதை வரலாறென்றும், அது பதியப்படுவது முக்கியமென்றும் கருதி ஒரு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராஜன். யமுனா, ஜமுனா என்ற கேரளத்துச் சகோதரிகள், கார்த்திக்கின் தெருவிற்குக் குடி வருகின்றனர். தங்கை ஜமுனா கார்த்திக்கைக் காதலிக்க, கார்த்திக்கோ ஜமுனாவை விட அழகாக இருப்பதாக நினைக்கும் யமுனாவைக் காதலிக்கத் தொடங்குகிறான். அக்கேரளத்துப் பெண்களின் அப்பாவிற்கு, மகள்களை துபாய் வாழ் மணமகனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆசை. அவரது எதிர்ப்பை மீறி, கார்த்திக் தன் காதலில் எப்படி வாகை சூடுகிறான் என்பதே படத்தின் கதை. நாயகனை யூ-ட்யூபராகக் காட்டினாலும், வேலை வெட்டியில்லாதவர் கணக்கிலேயே அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் போல் வைக்க வேண்டியுள்ளது. அழகான பெண்ணைக் கண்டதும் காதல், பின் அவள் ஒத்துக் கொள்ளும்வரை இடைவிடாது துரத்திக் கொண்டே இருப்பதென இயக்குநர் ராஜேஷின் எஸ்.எம்.எஸ். ...
அன்பறிவு விமர்சனம்

அன்பறிவு விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம். அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். அன்பழகனும் அறிவழகனும் இரட்டையர்கள். மனைவியிடம் அன்பை விட்டுவிட்டு, தன்னுடன் அறிவை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார் இரட்டையர்களின் தந்தை. பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை. இரட்டையர்கள் ஒருநாள் சந்தித்துக் கொண்டு படம் சுபமாக முடியும் என்பது வி.எஸ்.ராகவன் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் சினிமா ஃபார்முலா. ஆக, எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதில் மட்டுமே சுவாரசியம் காட்ட இயலும். ஆனால் சுவாரசியம் ஒரு பொருட்டே இல்லை என்ற ரீதியில் திரைக்கதை பயணிக்கிறது. படம் தொடங்கியதும் வில்லன் விதார்த் மைண்ட் வாய்ஸில், குடும்பம் எப்படிப் பிரிகிறது, ஊர் ஒன்றுபடாமல் ஏன் இருக்கிறது என சுருக்கமாக ஃப்ளாஷ்-பேக்கை முடித்து விடுகிறார்கள். பிறகு கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சுமார்...