Shadow

Tag: கோச்சடையான்

ஹலோ கோச்சடையான்

ஹலோ கோச்சடையான்

சினிமா, திரைத் துளி
கோச்சடையான் ரிலீஸ் தேதி சொன்னாலும் சொன்னார்கள்.. ஆளாளுக்கு கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டனர். இந்தியாவின் பிரபல செல் போன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்பன் மொபைல் ரஜினி ரசிகர்களுக்காக கோச்சடையான் ஸ்பெஷல் எடிஷன் போன்களை சந்தைக்கு கொண்டுவருகிறார்கள். பத்து லட்சம் போன்களை தங்களுடைய 27000 அவுட்லெட் கடைகளின் மூலம் தென்னிந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோச்சடையான் முகமுடிகளும் கிடைக்கும். மொபைல் வெளியிடப்படும் முன், விளம்பரத்திற்காக தென்னிந்திய ரேடியோ ஸ்டேஷன்களில் 60000 நொடிகளையும், டி.வி. சேனலில் 600 நொடிகளும் விளம்பரத்திற்காக வாங்கியுள்ளது கார்பன். அதே போல், அனைத்து மொழி தினசரிகளிலும் மூன்று முழுப் பக்கங்களுக்கு விளம்பரம் தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கார்பன் மொபைலின் இயக்குநரான திரு. சுதிர் ஹசிஜா செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்....