ஜிப்பா ஜிமிக்கி விமர்சனம்
ஜிப்பா என்பது நாயகனுக்கான குறியீடு, ஜிமிக்கி என்பது நாயகிக்கான குறியீடு. ஜிப்பாக்கும் ஜிமிக்கிக்குமான ஊடல்தான் திரைப்படத்தின் கதை.
சென்னை டூ கூர்க், கூர்க் டூ சென்னை என படத்தின் பெரும்பகுதி பயணத்திலேயே கழிகிறது. நாயகனும் நாயகியும் வழியில் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் சுவாரசியமானவர்கள். முக்கியமாக கன்னட விவசாயியாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மனதைக் கனக்க வைக்கிறார்.
படத்தில் நெகிழ்ச்சிக்குரிய காட்சிகள் ஏராளமாக உண்டு. ஆடுகளம் நரேனும், விஜய் டி.வி. ‘தாயுமானவன்’ புகழ் செளந்தரராஜனும் பேசும் காட்சிகள், இளவரசு தன் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஃப்ளாஷ்-பேக் காட்சிகள், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் அவர் மனைவியும் வரும் காட்சிகளை ஆகியவை உதாரணமாகச் சொல்லலாம்.
படத்தில் வில்லன் இருந்தே ஆக வேண்டுமென்ற திரை இலக்கணத்தை மீறக் கூடாதென திணித்துள்ளனர் குபீர் வில்லனை. அதன் பிறகு வரும் லோ பட்ஜெட் மெடிக்கல் மி...