சூரகன் – பெண்ணைக் காப்பாற்றி பிரச்சனையில் சிக்குபவன்
3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
வழக்குரைஞரும் தயாரிப்பாளரும் நாயகனுமான கார்த்திகேயன், “சூரகன் ட்ரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்தப் படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், ...