32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சூரகன் – பெண்ணைக் காப்பாற்றி பிரச்சனையில் சிக்குபவன்

Dinesh R சேலம் Published: 22/11/2023 3 நிமிட வாசிப்பு Updated: 27/11/2023 இது புதிது
எழுத்து அளவு:

3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வழக்குரைஞரும் தயாரிப்பாளரும் நாயகனுமான கார்த்திகேயன், “சூரகன் ட்ரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்தப் படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என்னைப் புதுமுகமாக நினைக்காமல், எனக்காக நிறைய மெனக்கெட்டு உழைத்தார். பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. அச்சு ராஜாமணி அருமையான இசையைத் தந்துள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது” என்றார்.

கலை இயக்குநர் தினேஷ் மோகன், “இது என்னுடைய நான்காவது திரைப்படம். இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. அவரும் நானும் நீண்ட நாள் நண்பர்கள், அவரிடம் இந்தக் கதையைக் கேட்டபோதே மிகவும் பிடித்திருந்தது. இதற்காக மற்ற பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிகக் கவனமெடுத்து, மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

நடிகர் வின்சென்ட் அசோகன், “சூரகன் படத்தில் எனக்கு வில்லன் ரோல். இயக்குநர் கதை சொல்லும்போதே, தெளிவாக இருந்தார். இப்போது வரும் இயக்குநர்கள் வில்லனுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சதீஷ் எனக்கு இந்தப் பாத்திரத்தைத் தந்ததற்கு நன்றி. அவர் க்ளீன் ஷேவ் தான் வேண்டும், நீங்கள் இப்படித் தான் இருக்கனும், என ஒவ்வொன்றிலும் தெளிவாகச் சொல்லி நடிப்பை வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோ ஃபைட் செய்ததைப் பார்த்த போது, எனக்கு விஜயகாந்த் சார் ஞாபகம் வந்தது. ஹீரோ நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும்” என்றார்.

இயக்குநர் சதீஷ் கீதா குமார், “இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிகக் கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ். வழக்கமாக ஆக்சன் காட்சிகளை நானே வடிவமைப்பேன், ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிகக் கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம். இந்தப் படத்தில் யாருக்கும் ஓய்வே தராமல் வேலை வாங்கியிருக்கிறேன் அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம். ஒரு ஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாக இருந்தது” என்றார்.

நடிகர்கள்:

V.கார்த்திகேயன்
சுபிக்‌ஷா கிருஷ்ணன்
வின்சென்ட் அசோகன்
நிழல்கள் ரவி
மன்சூர் அலிகான்
பாண்டியராஜன்
வினோதினி வைத்தியநாதன்
ஜீவா ரவி
சுரேஷ் மேனன்
ரேஷ்மா பசுபுலேட்டி
டேஞ்சர் மணி
கே.எஸ்.ஜி.வெங்கடேஷ
கலைமாமணி ஶ்ரீதர்
தியா
ஹாசினி பவித்ரா
தர்மா
விக்கி

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – சதீஷ் கீதா குமார்
திரைக்கதை – V.கார்த்திகேயன்
பாடல் வரிகள் – கு.கார்த்திக், திரவ்
நிர்வாகத் தயாரிப்பாளர் -பி.கார்த்திக்
ஒளிப்பதிவு – சதீஷ் கீதா குமார், ஜேசன் வில்லியம்ஸ்
படத்தொகுப்பு – ராம் சுதர்ஷன்
கலை – தினேஷ் மோகன்
இசை – அச்சு ராஜாமணி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.