Shadow

Tag: சவாரி

சவாரி விமர்சனம்

சவாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடர் கொலைகள் செய்யும் சைக்கோவும், அவனைத் தேடும் ஏ.சி.பி. சாலமனும் ஒரே காரில் சவாரி செய்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் எந்தப் பூச்சுகளையும் நம்பாமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடக்கி விடுகிறது. அங்கிருந்தே செழியனின் ஒளிப்பதிவு உங்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. எதையெல்லாம் ரசிகர்களால் யூகிக்க முடியுமோ, அதற்கு இடம் தராமல் இயக்குநரே முந்திக் கொண்டு அதைச் சொல்லி விடுகிறார். இடைவேளை வரை இப்படி விறுவிறுப்பாகச் செல்லும் சவாரி, அதன் பின் சற்றே நிதானமாய்ப் பயணிக்கிறது. ஏ.சி.பி. சாலமனாக புதுமுகம் பெனிட்டோ நடித்துள்ளார். படத்தின் பலம் அதன் கதாபாத்திரத் தேர்வுகளே! மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டுள்ள படத்தில், நடிகர்கள் நிறைவாக நடிக்காவிட்டால் சோடை போய்விடும். இவ்விஷயத்தில் இயக்குநர் குகன் சென்னியப்பன் மிகத் தெளிவாக தியேட்டர் ஆர்டிஸ்ட்களையும், தேர்ந்த நடிகர்களையும் உ...
சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்

சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்

சினிமா, திரைச் செய்தி
“இது அவருடைய கடைசிப்படம். ஈரம் படத்திற்குப் பிறகு வொர்க் சேட்டிஸ்ஃபிகேஷன் தந்த படம் எனப் பாராட்டினார் கிஷோர் சார்” என்றார் சவாரி படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன். ‘நாளைய இயக்குநர்’களில் இருந்து வந்தவர் குகன் சென்னியப்பன். நாளைய இயக்குநர்கள் எதிர் குழுவிலிருந்த கார்த்திக் யோகியுடன் இணைந்து, சவாரி கதையை உருவாக்கியுள்ளார். ‘செழியன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கிட்டா இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன்’ என கண்டிஷன் போட்டுள்ளார் தயாரிப்பாளர். ‘ஸ்க்ரிப்ட் கொடுத்துட்டுப்போங்க. நான் தேர்வு செய்துதான் ஒத்துப்பேன். பிடிச்சிருந்ததுன்னா செய்யலாம்’ எனச் சொல்லியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். அவருக்கு திரைக்கதை பிடித்திருந்ததோடு அன்றி, “நீங்க கிஷோர்க்கிட்ட போய் இந்த ஸ்க்ரிப்ட் கொடுங்க. அவருக்குக் கண்டிப்பா பிடிக்கும். உங்களால் முடிஞ்சதைக் கொடுங்க. டிமாண்ட் செய்ய மாட்டார். நான் கிஷோர்கிட்ட...
“இது ஸ்பெஷல் சவாரி” – சனம் ஷெட்டி

“இது ஸ்பெஷல் சவாரி” – சனம் ஷெட்டி

சினிமா, திரைத் துளி
தென்னிந்திய அழகிப் போட்டி 2016 இல் இரண்டாம் இடத்துக்கு வந்த நடிகை சனம் ஷெட்டி, தான் நடித்திருக்கும் சவாரி படம் மிக நன்றாக வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார். படம் பற்றி உற்சாகத்தோடு பேசும்போது, "சவாரி படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம். இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணி படம் என்று நான் சொல்வேன். மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இயக்குநர் குகனும் ஒளிப்பதிவாளர் செழியனும் சிறப்பாகப் பணியாற்றி, குறைந்த காலகட்டத்தில் மினிமம் பட்ஜெட்டில் மிக சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் படத்தில் ஹீரோ பெனிட்டோவின் காதலியாக நான் நடித்துள்ளேன். கதைப்படி கல்யாணத்தை நோக்கி முன்னேறும் அந்தக் காதலில், திருமணத் தினத்தன்று கதை வேறு கோணத்தில் விரியும். பல எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் நிகழும். எங்களத...
சவாரி – படக்குழுவினர்

சவாரி – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> பெனிட்டோ ஃப்ராங்களின் >> சனம் ஷெட்டி >> கார்த்திக் யோகி >> மதிவாணன் >> T.M.கார்த்திக் >> அருண் அலெக்சாண்டர் >> பாண்டியன் >> முனிஷ்காந்த் >> கவிதாலயா கிருஷ்ணா >> ‘லொள்ளு சபா’ ஈஸ்டர்தொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு நிறுவனம் – எண்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ் >> இயக்கம் – குகன் சென்னியப்பன் >> ஒளிப்பதிவு – செழியன் >> படத்தொகுப்பு – T.E.கிஷோர் >> இசை – விஷால் சந்திரசேகர் >> கலை – சதிஷ் குமார் >> பாடல் – சாருகேஷ் சேகர் >> சண்டை – மிரட்டல் செல்வா >> மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா...
த்ரில்லிங்கான சவாரி.!

த்ரில்லிங்கான சவாரி.!

சினிமா, திரைத் துளி
த்ரில்லர் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் இருக்கும். கொலைக்காரன் யாரென்று தெரியாமல், இவனாக இருக்குமோ, அவனாக இருக்குமோ என்று ரசிகர்களை யூகிக்க வைப்பதே இயக்குநர்களுக்கு பெரும் சவால். அத்தகைய படங்களில் ஒன்றுதான் சவாரி. ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் தகுதி படைத்த படங்கள் என்றுமே வெற்றி பெரும். இந்தப் படத்தின் பலமாக இது அமையும். அறிமுக இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும் போது, 'இன்றைய காலகட்டத்தில் நமக்கு எதிலும் வேகம், எல்லாவற்றிலும் வேகம். படம் பார்க்கும் ரசிகர்கள் கூட வேகமான தடதட என ஓடும் திரைக்கதை உள்ள படங்களைத்தான் ரசிக்கின்றனர். ரோடு த்ரில்லர் என்ற புதிய பாணியில் இந்தக் கதை எழுதப்பட்டு இருக்கிறது. புதிய தொழில் நுட்பக் கலைகளுடன் ஜொலிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும' என்றார். அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி' உரிமைய...