25 வகை திருஷ்டியும், தமிழகத்தை ஆண்டவர்களும்
சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நாயகன் வெளியூரிலிருந்து வருவார். அப்போது நாயகி அவரை வரவேற்று திருஷ்டி சுத்திப்போடுவார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகையான திருஷ்டியை மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார்.
இன்னொரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் எனக் கேட்க, நாயகி காயத்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆண்டது யார் யார் என மூச்சுவிடாமல் பேசி நடித்து யூனிட்டின் கைத்தட்டலை வாங்கியுள்ளார்.
நாயகி காயத்ரி கூறும்போது, நீ”ண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடிக்கவேண்டும் என்று இயக்குநர் பழனிவேல் கூறியபோது பயந்தேன். ஆனால் இயக்குநர் பழனிவேல் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். தமிழ் தெரிந்த நாயகி என்பதால் புரிந்து பேசி ஒரே...