
குழந்தைகள் தினத்தன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். ஜாக்குவார் தங்கமும், நடிகைகள் நமீதாவும் வசுந்தராவும் பெற்றுக் கொண்டனர்.
பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ”எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லித் தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்திருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். விழா நடத்துபவர்கள் பலரது தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன். அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன். நான் சம்பந்தப்படாத விழாவாக இருந்தாலும் சென்று வாழ்த்தி வருகிறேன். ஊக்கப்படுத்துகிறேன். அப்படித்தான் இங்கே வந்திருக்கிறேன். சினிமாவில் எல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி ஒற்றுமையாக இருக்கவேண்டும். இப்படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்றார்.