Shadow

Tag: சுரேஷ் சந்திரா

அக்டோபர் 7 – ரெமோ

அக்டோபர் 7 – ரெமோ

சினிமா, திரைத் துளி
'ரெமோ' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, ரெமோ படத்தின் போஸ்டர் வெளியீடு என ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் ரெமோ படக்குழுவினர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர். ஆனால் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல், சிறந்த கதைக்களம், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினரின் கடின உழைப்பு என எல்லாம் தான் ரெமோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது. மேலும், அனிருத்தின் துள்ளலான இசையில் அமைந்துள்ள 'ரெமோ சிக்நேச்சர் தீம்' மற்றும் 'செஞ்சிட்டாளே' பாடல்கள் ரெமோ படத்தின் எதிர்பார்ப்புக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. "எப்படி ஒரு குழந்தை கருவில் உருவான நிமிடம் முதல் பிறக்கும் வரை இருக்கும் தருணங்களை அதன் குடும்பமும், நட்பு வட்டாரமும் கொண்டாடுகிறதோ, அதே போல் தான் எங்கள் ரெமோ படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் ஒட்டுமொத்த படக்க...
சிங்கையில் ரெமோ

சிங்கையில் ரெமோ

சினிமா, திரைத் துளி
சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கும் ரெமோ, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், புதுமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும், அனிருத் இசையமைத்த 'ரெமோ நீ காதலன்' பாடலும் கடந்த வியாழன் அன்று சென்னையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. பிரம்மாண்டத்தின் மறு ரூபமான இயக்குநர் ஷங்கர் தலைமை தாங்கிய இந்த விழாவானது, ஒட்டுமொத்த திரையுலகக் கண்களையும் 'ரெமோ' மீது திரும்புமாறு செய்திருக்கிறது. இப்படி ஒரு பாடலின் வெளியீட்டையே, மிகப் பிரம்மாண்டமாக வெகு விமரிசையாகக் கொண்டாடிய படக்குழுவினர், வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி சிங்கப்பூரிலும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த உள்ளனர். சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் இடையே வெகு பிரபலமான சிவகார்த்திகேயனுக்கு அங்கு சிறப்பான வரவேற்புக்குக் காத்துக் கொண்டிருக்கிறது. 'ரெமோ' திரைப்படத்தின் மற்றொரு பாடலான ‘...
க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

சினிமா, திரைத் துளி
பொதுவாகவே இயக்குநர் அறிவழகனின் படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாகத்தான் இருக்கும்.  அதுவும் இது ஓர் அதிரடிப் படம் என்பதால், சண்டைக் காட்சிகளுக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்கிறது சமீபத்தில் வெளியான படத்தின் 'மோஷன் போஸ்டர்'. தற்போது 'குற்றம் 23' , அருண் விஜய்யின் அசத்தலான அதிரடியிலும், அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிலும்  கலை கட்டி வருகிறது. 'சாட்டை' படப்புகழ் மகிமா நம்பியார் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து  நடிக்கும் இந்த மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படத்தை இந்திர குமார் அவர்களின் 'ரேடான்  திசினிமா பீபள்' நிறுவனத்தோடு இணைந்து 'இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்த்தி அருண் தயாரித்து வருகிறார். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அருண் விஜய்யின்  'குற்றம் 23' படத்தின் இறுதிக்கட்ட கிளைமாக்ஸ் காட்சிகள், சென்னையிலு...
பைசா முக்கியம் – நடிகை ஆரா

பைசா முக்கியம் – நடிகை ஆரா

சினிமா, திரைத் துளி
பணத்தை கதைக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள படம் பைசா. விஜயின் 'தமிழன்' திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப்படத்தை இயக்க, பசங்க புகழ் ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் முன்னணி கதாபாதிரங்களில் நடித்துள்ளனர். கான்பிடண்ட் பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ் மற்றும் RK ட்ரீம் வேர்ல்ட் இந்தப் படத்தைத் தயாரிக்க கராத்தே கே.ஆனந்த் இணை தயாரிப்பு செய்துள்ளார். நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், செண்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. K.P. வேல்முருகனின் ஒளிப்பதிவும், J.V. இசையும் படத்திற்கு வலுவூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் பைசாவை மையமாக வைத்துக் கொண்டு உருவான பாடல்கள் ஏராளம். பிரபு தேவாவின், 'சென்னை பட்டினம் எல்லாம் கட்டணம்’, சிலம்பரசனின், ‘நோ மணி நோ ஹனி’, கருணாகரனின்,‘காசு பணம் துட்டு மணி’ என ஏகப்பட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம...
பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

சினிமா, திரைத் துளி
தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி என பல தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டிருக்கிறது, பிரபு தேவா - தமன்னா - சோனு சூட் நடிப்பில் விஜய் இயக்கும் DEVI(L) திரைப்படம். பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவா, ஹாலிவுட்டின் சிறந்த கதாசிரியர் பவுல் ஆரோன் இந்தப் படத்திற்கு விஜயுடன் இணைந்து கதை எழுதுவது, என பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த நட்சத்திரக் கூட்டணியின் DEVI(L) திரைப்படம், தனது முதல் நாளில் இருந்தே பலரின் ஆர்வத்தைத் தூண்டி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தப் படத்தை பற்றிய தகல்வல்கள் யாவும் காட்டுத்தீ போல் அனைவரிடத்திலும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பாரா கான், இவர்களுடன் இணைந்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. நடன இயக்குநராக மட்டுமில்லாமல் படத...
ரெமோவுடன் இணையும் ராஜா

ரெமோவுடன் இணையும் ராஜா

சினிமா, திரைத் துளி
இன்னும் ரஜினிமுருகன் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தனது அடுத்த படத்திலும் அந்த இமேஜைத் தக்க வைக்க அவ்வெற்றி கூடுதல் பொறுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் ‘ரெமோ’ என தனது அடுத்த படத்தின் தலைப்பை ஈர்ப்பாக வைத்து விட்டு, படப்பிடிப்பிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். “இந்த வருட, பருவ மழையின் தொடக்கத்தின் பொழுதே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில், படத்தை முடிக்கும் முனைப்புடன் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தனது இளம் குழு ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றி வருகிறார்” என மகிழ்ச்சியாகச் சொன்னார் 24 ஏஎம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர்.டி.ராஜா. ரெமோ குழுவினர், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு விசாகப்பட்டினம் கிளம்ப ஆயுத்தமாக உள்ள சூழலில், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தனது அடுத்த தயாரிப்பை இன்று பூஜையுடன் தொடங்கினர்.“நன்றாகத் தொடங்கப்ப...
பிச்சைக்காரன் – நிச்சய வெற்றி.!

பிச்சைக்காரன் – நிச்சய வெற்றி.!

சினிமா, திரைத் துளி
“இந்தப் படம் ஹிட்டாகும் என்பதில் எள்ளளவும் எனக்கோ, விஜய் ஆண்டனிக்கோ சந்தேகமில்லை. முதல் நாள் முதல் இந்த நொடி வரை அதில் ரொம்ப தெளிவா இருக்கேன். ஆனால், விநியோகஸ்தர்கள் படம் பார்க்கும் பொழுது மட்டும், ‘என்ன சொல்வாங்களோ?’ எனக் கொஞ்சம் டென்ஷனா இருந்தது. அவங்க ஸ்க்ரீனிங் முடிந்ததும், கே.ஆர்.ஃப்லிம்ஸ் சரவணன் முகத்தைப் பார்த்தேன். சிரிச்சுட்டு இருந்தார். டென்ஷன் போய் மீண்டும் நம்பிக்கை வந்துடுச்சு” என்றார் பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி. “இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டேன். ரொம்ப கொடுமையாக இருந்தது. மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்ச...