Shadow

Tag: சுரேஷ் சந்திரா

சக்காளி தக்காளி காலி – விஜய் ஆண்டனி

சக்காளி தக்காளி காலி – விஜய் ஆண்டனி

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
'லைக்கா புரொடக்ஷன்ஸ்' - ராஜு மஹாலிங்கம் தயாரித்து வரும் 'எமன்' படத்தை இயக்கி வருகிறார் 'நான்' படப்புகழ் ஜீவா ஷங்கர். விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும், "என் மேல கை வச்சா காலி" பாடலை ஹேமச்சந்திரா பாட, அண்ணாமலை மற்றும் சேட்டன் எம்.சி. (ராப்) ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர். என் மேல கை வச்சா காலி அந்துடும்டா உன்னோட தாலிஎன் மேல கை வச்சா காலி - மகனே அந்துடும்டா உன்னோட தாலி - கேளுமரம் செத்தா நாற்காலி நீ செத்தா இடம் காலி சக்காளி தக்காளி காலிஎன ஹிப் - ஹாப் பாணியில் ஆரம்பமாகிறது பாடல். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திருநெல்வேலியில் 'லைக்கா கோவை கிங்ஸ்' மற்றும் 'சேபாக் சூப்பர் கில்லிஸ் ' இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின் போது வெளியிடப்பட்ட "என் மேல கை வச்சா காலி" பாடலானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ‘நாக்க.. முக்க’ போல் இத...
சென்னை ராக்கர்ஸ் – செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்

சென்னை ராக்கர்ஸ் – செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்

சமூகம்
நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டு செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் ஆட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் விளையாட இருக்கும் அணி தான் 'சென்னை ராக்கர்ஸ்'. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த சிறந்த நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ளது சென்னை ராக்கர்ஸ்.  இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்காகப் பணிபுரிந்து வரும் 'டாட் காம் இன்போவே', 'அடத்தா', 'ஜிமாசா' மற்றும் 'கலாட்டா' ஆகிய நிறுவனங்களின் இயக்குநரும், தலைமை அதிகாரியுமான திரு. சி.ஆர்.வெங்கடேஷ் (சி.ஆர்.வி) இந்தச் சென்னை ராக்கர்ஸ் அணியின் உரிமையாளராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது."தரமான பாட்மிண்டன் ஆட்டத்தைப் புதுமையான விதத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள். நட்சத்திரங்கள் தங்களின் பாட்மிண்டன் திறமையை வெளிப்படுத்த சிறந்ததொரு தளமாக இந்த 'செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்’ போட்டி விளங்கும். அதுமட்டுமின்றி, பாட்மி...
எம் மேல கைய வெச்சா காலி – ‘எமன்’ படப்பாடல்

எம் மேல கைய வெச்சா காலி – ‘எமன்’ படப்பாடல்

சினிமா, திரைத் துளி
விரைவில் வெளியாக இருக்கும் 'சைத்தான்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எமன்’. தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து, அதைத் திரைப்படங்களாக ரசிகர்களுக்கு வழங்கி வரும் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'எமன்' படத்தை இயக்கி இருக்கிறார் 'நான்' பட இயக்குநர் ஜீவா ஷங்கர். 'எமன்' படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடியிருக்கும் 'எம் மேல கைய வெச்சா காலி' என்னும் பாடலானது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கின்றது. 'லைக்கா கோவை கிங்ஸ்' - 'சேப்பாக் சூப்பர் கில்லிஸ்' அணிகளுக்கு இடையே செப்டம்பர் ஐந்தாம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியின் போது, இந்த' எமன்' படத்தின் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்....
பயம் ஒரு பயணம் விமர்சனம்

பயம் ஒரு பயணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேய்ப் படங்கள், காமெடிப் படங்களாக மாறி மிகுந்து விட்ட சூழலில் முழு நீள ‘சீரியஸ்’ பேய்ப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிஷர்மா. தன்னைக் கொன்றவர்களைப் பட்டெனக் கொன்றுவிடும் பேய், நாயகனை மட்டும் பயமுறுத்தி ஓட விட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தப் பேய் ஏன், எதற்கு அப்படிச் செய்கிறது என்றும், நாயகனின் நிலை என்னானது என்பதும்தான் படத்தின் கதை. பரத் ரெட்டி முதல் முறையாக நாயகனாக நடித்துள்ளார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஓடிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். மகளின் அன்பையும், மகள் மீது அன்பு செலுத்துவதைப் பெரும்பேறாகக் கருதும் பாசமுள்ள தந்தையாகவும் உலா வந்துள்ளார் பரத். படத்தின் மையக்கருவே, மகள் மீது தந்தை கொண்ட அன்புதான் என்றும் சொல்லலாம். தந்தை மகள் மீது காட்டும் பாசம், படத்தில் வரும் கிளைக்கதையிலும் மையக்கருவாக வருகிறது. விஷாகா சிங்கின் தந்தையாக நடித்தி...
ரெமோ – திருட்டைத் தடுக்க புது யுக்தி

ரெமோ – திருட்டைத் தடுக்க புது யுக்தி

சினிமா, திரைத் துளி
ரெமோ மிகப் பெரும் வெற்றியைப் பெரும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது படக்குழு. பொதுவாகவே ஒரு திரைப்படமானது அதன் வெளியீட்டு தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளி நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரெமோ படத்தின் பாதுகாப்பு கருதி அதை சற்றே மாற்றி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. "ஒரு நாள் முன்னதாக நாம் வெளிநாடுகளில் திரைப்படத்தை வெளியிடுவதால், வெகு சுலபமாக அந்தப் படமானது வெளியே கசிந்து விடுகிறது. ஆனால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் இந்தியா உட்பட மற்ற வெளி நாடுகளிலும் திரைப்படத்தை வெளியிட்டால், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவு. இது நம்முடைய வாழ்க்கை!! எந்தவித அச்சமும் இன்றி இதைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து வழி வகைகளையும் நாம் உருவாக்க வேண்டும்” என்று கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. திரைப்படத் தயாரிப்புத் துறையில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் மூலம், ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண...
பலூனில் நுழைந்த ஜனனி

பலூனில் நுழைந்த ஜனனி

சினிமா, திரைத் துளி
பலூன் படத்தில் நடிகை ஜனனியையும் மற்றொரு கதாநாயகியாக அறிவித்துள்ளதுள்ளனர். பலூன் திரைப்படத்திற்காக சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "அனைவரையும் ஈர்க்கக் கூடிய கண்கள் தான் ஜனனியின் பலமே! எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தன்னுடைய கண்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தக்கூடிய ஜனனி எங்களின் பலூன் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது பங்களிப்பு எங்களின் படத்திற்குக் கூடுதல் மதிப்பைத் தரும் எனப் பெரிதும் நம்புகிறோம். வணீக ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறத் தேவையான எல்லாச் சிறப்பம்சங்களையும் எங்களின் பலூன் திரைப்படத்தில் உள்ளடக்க முயற்சி செய்து வருகிறோம." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பலூன் படத்தின் இயக்குநர் சினிஷ்....
‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு

‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு

சமூகம்
விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு அணிகளில் ஒன்றான 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' நேற்று சென்னையில் தங்கள் அணியின் வீரர்களை க்ரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய அணியின் தலைச் சிறந்த ஆட்டக்காரரும், அதிரடி ஓப்பனிங் வீரருமான விரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். "தமிழ்நாடு பிரிமீயர் லீக்' வெறும் ஒரு கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டி, மாநில அளவில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாகவும் விளங்குகின்றது. இந்த 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணிக்காக நீங்கள் விளையாடும் ஆட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் காண இருக்கிறது. இதன் அணியில் இருந்து பல வீரர்கள் ஏ-கிளாஸ் கிரிக்கெட்டிலும், சர்வதேப் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு என் வாழ்த்துகள்" என்று 'மதுரை சூப்பர் ஜெய...
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

சினிமா, திரைத் துளி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம்.வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, 1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திரப் பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாபத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின. "அங்கே சிரிப்பவர்கள்...
தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்ச்செல்வனுக்கு காவ்யா மீது கண்டதும் காதல் எழுகிறது. அவளை தினம் பார்ப்பதற்காக கொரியர் கம்பெனியில் வேலை செய்கிறான். சமூகச் செயற்பாட்டாளர் சத்யமூர்த்திக்குக் கொரியர் கொடுக்கப் போகும் பொழுது ஒரு பிரச்சனை எழுகிறது. அதென்ன கொரியர்? யாரால் பிரச்சனை? அதில் சிக்கிக் கொள்ளும் தமிழ்ச்செல்வன் எப்படி மீள்கிறான் என்பதுடன் படம் நிறைவுறுகிறது. தமிழ்ப் படங்களில் சமூகச் செயற்பாட்டாளராக அதிகம் முறை நடித்தது யாரென ஏதேனும் ஆய்வு மேற்கொண்டால், கண்டிப்பாக நாசர் என்றே முடிவு வருமெனத் தோன்றுகிறது. மிகச் சமீபத்தில் வெளியான அர்த்தநாரி, கபாலி முதல் ஏகப்பட்ட படங்களைச் சான்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். சுந்தர்.சி நடித்த ‘ஆயுதம் செய்வோம்’ மற்றொரு நல்ல உதாரணம். நாசரை இந்தப் புனித பிம்பத்தில் இருந்து மீட்டு, ‘அவ்வை சண்முகி’ படத்தில் வரும் பாஷா பாய் போல் குணசித்திர வேடங்களிலும் மீண்டும் அவரைத் தமிழ்த் திரையுலகம் நடிக்...
‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ – சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக

‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ – சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக

சமூகம்
'முத்துநகர்' என்னும் பெருமையைப் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில், வெறும் முத்துக்களும், ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்களும் மட்டும் பிரபலம் கிடையாது, கிரிக்கெட் விளையாட்டும் அந்த மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது தான். விரைவில் நடக்கவிருக்கும் "தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2016" கிரிக்கெட் போட்டியே அதற்குச் சிறந்த உதாரணமாக விளங்கும். 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' எனப் பெயரிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் அணியை, சென்னை 'ஆல்பர்ட்' தியேட்டரின் உரிமையாளர் முரளிதரன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணிக்கு வழிக்காட்டியாக ம்ருகாங் தேசாயும், அணியின் பயிற்சியாளராக முன்னாள் 'ரஞ்சி கோப்பை' விளையாட்டு வீரர் ஜே. ஆர். மதனகோபாலும் பணியாற்றி வருகின்றனர். நாடெங்கும் கிரிக்கெட் ஜுரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்...
ரெமோ – படக்குழுவினர்

ரெமோ – படக்குழுவினர்

சினிமா, திரைத் துளி
நடிகர்கள்:>> சிவகார்த்திகேயன் >> கீர்த்தி சுரேஷ் >> சரண்யா பொன்வண்ணன் >> 'நான் கடவுள்' ராஜேந்திரன் >> யோகிபாபு >> நரேன் >> கல்யாணி நடராஜன் >> அன்சன் பால் >> பேபி ரக் ஷா >> பிரதாப் போத்தன் >> கே.எஸ்.ரவிக்குமார் >> மெளலி >> மயில்சாமி >> சுவாமிநாதன்பணிக்குழு:>> தயாரிப்பு நிறுவனம் - 24 ஏஎம் ஸ்டுடியோஸ் >> தயாரிப்பு - ஆர்.டி.ராஜா >> இயக்கம் - பாக்கியராஜ் கண்ணன் >> ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம் >> இசை - அனிருத் >> சவுண்ட் டிசைனர் - ரசூல் பூக்குட்டி >> படத்தொகுப்பு - ரூபன் >> கலை - T.முத்துராஜ் >> நடனம் - ராஜு சுந்தரம், பிருந்தா >> சண்டை - அனல் அரசு >> போஸ்டர் டிசைன் - டூனி ஜான் >> உடை வடிவமைப்பு - அனு பார்த்தச...
யுவன் இசையில் ‘பலூன்’

யுவன் இசையில் ‘பலூன்’

சினிமா, திரைத் துளி
காதல் கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வரும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக R.சரவணன், கலை இயக்குநராக சக்தி வெங்கடராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா மற்றும் நடன இயக்குநராக ஷெரிப் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். "முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்கு பிடித்தமான படமாக தான் நாங்கள் பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களைக் கவரக்கூடிய கதை என்பதால், எங்கள் பலூன் படத்தில் மெலோடி பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நங்கள் கருதினோம். 'மெலோடி' என்றாலே அது யுவன்ஷங்கர் ராஜா தான். எங்கள் படத்திற்கு அவர் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் அவருடைய இசையும், பாடல்களும் எங்கள் பலூன் திரைப்படத்திற்கு முதுகெலும்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று நம்பிக்கையுடன் கூற...
சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’

சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’

சினிமா, திரைத் துளி
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ரசிக்கும்படி திரையில் கொண்டு வருவது சத்யராஜின் பாணி. அதுவே அவரை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமாக இருந்தால்? படத்தை அவரே, நாதாம்பாள் பிலிம் பாக்டரி சார்பாகத் தயாரித்து நடிப்பார். "இயக்குநர் கார்த்திக் என்னிடம் வந்து கதையைச் சொன்ன அடுத்த நொடியே, இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தின் கதையானது என்னைக் கவர்ந்துவிட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் புதுமுகமாக இருந்தாலும், அவரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்தப் படத்திற்குப் பக்கபலமாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு ரேடியோ ஸ்டேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூர்ந்து ஆராய்ந்து, அதை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் யுக்தியை கார்த்திக் கையாண்டு வருகிறார். ஒரு ரேடியோ ஸ்டேஷனின் தலைமை அதிகாரியாக நான் இந்தப் படத்தில் நடித்து வருகிறேன். தொகுப்பாளர்கள...
கபாலி படம் பார்க்க லீவ் விட்ட இயக்குநர்

கபாலி படம் பார்க்க லீவ் விட்ட இயக்குநர்

சினிமா, திரைத் துளி
ஜெய்யும் அஞ்சலியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘பலூன்’. '70 எம் எம்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர் தயாரித்து வரும் பலூன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சினிஷ். வலுவான இளம் திறமையாளர்களை உள்ளடக்கிய பலூன் படக்குழுவினர், கபாலி படத்தின் மேல் இருக்கும் எல்லையற்ற ஆர்வத்தால், வரும் ஜூலை 22 ஆம் தேதி படப்பிடிப்புக்கு விடுமுறை அளித்துள்ளனர். "சிறு வயது முதலே, ரஜினி சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்த நாங்கள் அனைவரும், ஜூலை 22 ஆம் தேதியை 'கபாலி' தினமாகவே கொண்டாட முடிவு செய்துவிட்டோம். உலகமெங்கும் கபாலி படத்தின் வருகையைக் கொண்டாடி கொண்டிருக்க, நாங்களும் அதில் இணையப் போகிறாம் என்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் க...