
வண்ண ஜிகினா விமர்சனம்
கருப்பாய் இருக்கிறோமென்ற தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கும் பாவாடை, தனக்கொரு துணையைத் தேடிக் கொள்ள ஃபேஸ்புக்கில் போலியான அடையாளங்களுடன் கிஷோர் குமார் என்ற பெயரில் ஃப்ரொஃபைல் ஒன்றைத் தொடங்குகிறான். அவனது எண்ணம் ஈடேறி அவனுக்கொரு காதலி கிடைத்தாளா இல்லையா என்பதுதான் வண்ண ஜிகினாவின் கதை.
கால் டாக்ஸி ட்ரைவர் பாவாடையாக விஜய் வசந்த். கதையின் நாயகனாக கச்சிதமாகப் பொருந்துகிறார். ஏஞ்சல் பிரியாவாக சானியா தாரா. காரணமேயின்றிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறார். வில்லனே தேவைப்படாத கதையில், கொதிக்கும் கொப்பறையில் தள்ளியது போன்ற ரியாக்ஷனுடன் படம் நெடுகே பொருந்தாமல் வருகிறார் ஆன்சன் பால்.
படம் எதைப் பற்றிப் பேச விழைகிறதோ, அதற்கு எதிர் திசையில் சென்று முடிகிறது. ஆனால் சுபமாய் முடிவது ஆறுதலான விஷயம். ‘கருப்பாக உள்ளவர்கள், சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர்’ என்பதுதான் படம் சொல்ல வ...