Shadow

Tag: டாப்சி

ஷாருக்கானின் ‘டங்கி டிராப் 1’

ஷாருக்கானின் ‘டங்கி டிராப் 1’

சினிமா, திரைத் துளி
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார். தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான ‘டங்கி’ மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். இரண்டு மிகப் பெரும் திரைக்கலைஞர்களான ஷாருக் கான் மற்றும் ராஜு ஹிரானி ஆகிய இருவரும் இணைகின்றனர். நமக்குள் அன்பான நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம். இன்று வெளியிடப்பட்ட ‘டங்கி டிராப் 1’ ட்ரெய்லர், ராஜ்குமார் ஹிரானி அமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது. இது, இதயம் வருடும் ஓர் அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களில...
அனபெல் சேதுபதி விமர்சனம்

அனபெல் சேதுபதி விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஒரு மிகப் பெரிய அரண்மனை. பெளர்ணமி அன்று அங்கு யாரேனும் தங்கினால், அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். அத்தகைய அரண்மனைக்குள், திருட்டைத் தொழிலாகக் கொண்ட ஓர் ஏமாற்றுக்காரக் குடும்பம் நுழைகிறது. பின் என்னாகிறது என்பதை, பேய்ப்படத்திற்கான டெம்ப்ளேட்டில் இருந்து மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளார் தீபக் சுந்தர்ராஜன். இயக்குநர் சுந்தர்.சி-இன் அரண்மனை, அரண்மனை 2, ஜாக்ஸன் துரை, பெட்ரோமேக்ஸ் என தமிழில் வரிசை கட்டிக் கொண்டு, அண்மையில் வந்த பேய்ப்படங்களின் வரிசையே மிக நீளம். பார்த்துப் பழகி அலுத்துவிட்ட ஒரு ஜானரில், கொஞ்சம் சுவாரசியமான மாற்றத்தை வழங்கினால் கூட பார்வையாளர்களால் படத்தோடு ஒன்ற இயலும். படம் அப்புள்ளியைத் தொடுவதற்கு பதில், பார்வையாளர்களுக்கு அரண்மனையைச் சுற்றிக் காட்டுவதில் அலாதி இன்பம் காட்டுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், பல காலமாக அடைப்பட்டுக் கிடக்கும் வில்லன் பேயும், நாயகியோடு சேர்ந்து ஆச...
தப்பட் விமர்சனம்

தப்பட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. 'தப்பட்' என்றால் "அறை (slap)" என்று பொருள். 'ஆர்டிகிள் 15' எனும் அதி அற்புதமான படத்தை இயக்கிய அனுபவ் சின்ஹாவின் படம். அதுவும் குடும்ப வன்முறையைப் (Domestic violence) பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. மாமியார் கொடுமை, வரதட்சணைக்காகத் துன்புறுத்தப்படுவது, வசை மாரி பொழிதல், கையை நீட்டி அடித்தல் என்ற பிசிக்கல் & வெர்பல் அப்யூஸ்கள் மட்டும் டொமஸ்டிக் வயலன்ஸில் வராது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குடும்ப நலனெனக் காரணம் காட்டி ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது போன்றவையும் டொமஸ்டிக் வயலன்ஸ்தான். "நான் கார் ஓட்டக் கத்துக்கவா?" - டாப்சி. "முதலில் ஒழுங்கா பராத்தா போடக் கத்துக்க?" - டாப்சியின் கணவன். இந்த உதாசீனத்த...
கேம் ஓவர் விமர்சனம்

கேம் ஓவர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் போராடும் தைரியத்தை இழந்தாலே, விளையாட்டு முடிந்துவிடும். அதன் பின்னான வாழ்க்கை உயிரிருந்தும், இருளுக்குள் சிக்கிய நரகமாகவே இருக்கும். ஸ்வப்னாவின் வாழ்க்கை அத்தகைய இருளில் மூழ்கிவிடுகிறது. 2018 ஆம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியில் செல்லும் ஸ்வப்னா, நண்பனால் துரோகம் இழைக்கப்பட்டு தன் தைரியத்தை இழந்து தனக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்கிறாள். கேம் ஓவர் என்ற நிலையில் இருந்து, எப்படி அவள் மீண்டும் வாழ்க்கைக்குள் புகுகிறாள் என்பதுததான் படத்தின் கதை. நயன்தாரா நடித்த மாயா (2015) படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன், இப்படத்தை இயக்கியுள்ளார். இது அவரது மூன்றாவது படம். எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நடிப்பில் உருவான இறவாக்காலம் இன்னும் வெளியாகாதது துரதிர்ஷ்டமான ஒரு விஷயம். முதற்படத்தில், அவர் எப்படி பார்வையாளர்களைக் கட்டிப் போட்டாரோ, அதே போலவே, இப்படத்திலும் கட்டிப் போட்டுள்ளார். ‘ர...