தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம்
தலைப்பு மட்டுமன்று படமும் வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் கதைக்குப் பொருந்தும் தலைப்பாகத் தெரியவில்லை.
சூரியனின் மேற்பரப்பில் எழும் வெப்ப அலைகளால் பூமியில் காந்தப் புயல் வீசுகிறது. அதனால் செல்ஃபோன் சிக்னல்கள் வேலை செய்யாமல் போகின்றன. மீண்டும் எப்படி வேலை செய்கிறது, அதுவரை என்ன நிகழ்ந்தது என்பதே கதை.
வழக்கமான தமிழ்ப் படமாக இல்லாமல் படம் நெடுகவே நிறைய சுவாரசியங்கள் உண்டு. உதாரணத்திற்கு பிக்பாக்கெட் திருடனாக வரும் அஜய்யின் கதாபாத்திரம். எல்லாப் பாத்திரத்துக்குமே சம அளவு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனித்துவ அடையாளங்களையும் தந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு முகவர் முகிலாக வரும் அட்டகத்தி தினேஷ், கண்ணை உருட்டியவாறே இருக்கார் இப்படத்திலும். சிமியாக வரும் பிந்து மாதவியினுடனான காட்சிகள் ஈர்க்கவில்லை எனினும் அலுக்கவில்லை. சிமியின் குழந்தைப் பருவ ஃப்ளாஷ்-பேக், பிந்து மாதவியின் பாத்த...