Shadow

Tag: திருக்கோவலூர்

பொய்கையாழ்வார் – அனேகனான ஏகனான ஓர் பரம்பொருள்

பொய்கையாழ்வார் – அனேகனான ஏகனான ஓர் பரம்பொருள்

ஆன்‌மிகம், இது புதிது
ஒரு சாட்சியாக, பூமி, கடல், சூரியன் என அனைத்துமாக இருப்பது அவனே! முன்னொரு காலத்தில் ஒருநாள், திவ்விய பிரபந்த விளைநிலம் என்று சொல்லப்படும் திருக்கோவலூருக்குப் பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வாராகத் திகழும் பொய்கையாழ்வார் சென்றார். இரவு நேரமாகிவிட்டதால் ஓர் இல்லத்தின் முன்னிருந்த சிறிய திண்ணையில் படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில், பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும், “எனக்கு இடமுண்டோ?” என்று கேட்டார். ‘இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்’ என்று பொய்கையாழ்வார் எழுந்து அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ?’ என்று கேட்க ‘இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், நீரும் வாரும்’ என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஆழ்வார்கள் கோஷ்டிய...