
“அசுரவதம்: வதம் உண்டு வன்முறை இல்லை” – சசிகுமார்
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் "அசுரவதம்".
"சசிகுமார் சாருக்கு இது மிக முக்கியமான ஒரு படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் செய்திருக்கிறார். சசிகுமாருடன் இது எனக்கு 7 வது படம், எல்லாமே தனித்துவமான படங்கள். வெறும் 49 நாட்களில் மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம். எழுத்தாளராக ஒரு இடத்தில் உட்கார்ந்து எழுதிக் கொண்டு இருந்தவரை இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் புரட்டி எடுத்திருக்கிறோம். கிடாரி படத்தில் அவருடன் பழகியிருக்கிறேன். அதனால் அவரும் சொன்ன விஷயங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்தார்" என்றார் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.
"நான் இந்தப் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ், பிரேம், கதிர், சசிகுமார் என நிறைய பேர் காரணம். அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. படத்தில் நிறைய ...