Shadow

Tag: தூங்கா வனம்

தூங்கா வனம் விமர்சனம்

தூங்கா வனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் உல்லாசமாய் இருக்கும் விடுதியில், திவாகரின் மகனைக் கடத்தி வைக்கின்றனர். திவாகர் எப்படி தன் மகனை மீட்கிறார் என்பதே படத்தின் கதை. மீண்டும் ஓர் உத்தம அப்பா கதாபாத்திரத்தில் கமல் ஹாசன். பனிச் சுமையின் பாதிப்பு காரணமாக மனைவி விட்டுப் பிரிந்த கழிவிரக்கத்தில் உழல்பவர். கமலுக்கு, இத்தகைய கதாபாத்திரம் தண்ணீர் பட்டபாடாகி விட்டாலும். ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்ட அவர் தவறுவதே இல்லை. உதாரணமாக, ‘ஜீன்ஸு, ஜீன்ஸு.. டி.என்.ஏ.’ என அவர் மகனை நொந்து கொள்ளும் காட்சியைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகாவின் வசனங்கள் ஆங்காங்கே புன்னகையை வரவேற்கிறது. சாம்ஸும் தன் பங்கிற்குக் கலகலக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் என பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறார்கள். ஆனால், கமலுக்கு இணையாக அசத்துகிறார் பிரகாஷ் ராஜின் அசிஸ்டெண்ட்டாக வரும் குரு சோமசுந்த...
தூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்

தூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்

சினிமா, திரைத் துளி
“உத்தமவில்லன், பாபநாசம் என மியூஸிக் பண்ணி, அந்த ஹேங் ஓவரில் இருந்து வெளிவராமல் இருந்தேன். தூங்கா வனத்துக்கு எந்த பேட்டர்னில் மியூஸிக் பண்ணலாம்னு ஐடியா போயிட்டே இருந்தது. கமல் க்ளிட்ச் மியூஸிக் பண்ணலாம் என்றார். எனக்கு ஒரு சந்தேகம். க்ளிட்ச்னு ஒருவகை மியூஸிக் இருக்கு. அதைத்தான் சொல்றாரா எனக் கேட்டேன். ஆமாம்ன்னார். ஆனா, அந்த வகை மியூஸிக்கில் ஸ்பீக்கர் கிழிஞ்சாப்ல சத்தம் வரும். சரியா மிக்ஸ் செய்யலைன்னு நினைச்சுட்டா என்னப் பண்றதுன்னு டென்ஷனா கேட்டேன். ‘க்ளிட்ச் மியூஸிக், மெட்டல் மியூஸிக் ஒன்னு இருக்குன்னு நாம ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கலைன்னா வேற யார் சேர்ப்பா?’ என என்னிடம் கேட்டார். இதுல நானொரு பாடம் கத்துக்கிட்டேன். புதுசா ஒன்னு ஆடியன்ஸ்க்கு அறிமுகப்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டக் கூடாது” என்றார். “ஜிப்ரனின் வாய் பேசாது; அவரது வாத்தியங்கள் பேசும்” என ஜிப்ரானைப் புகழ்ந்த வைரமுத்து, “ஒருந...