Shadow

Tag: தொடரி

தொடரி விமர்சனம்

தொடரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடரியில் (ட்ரெயின்) உணவு விற்பவரான பூச்சியப்பனுக்கு, தொடரியில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் டச்-அப் பெண்ணான சரோஜா மீது கண்டதும் காதல் வருகிறது. அந்தத் தொடரியின் ஓட்டுநர் இறந்து விடுவதால், நிறுத்துவாரின்றி தொடரி தறி கெட்டு ஓடுகிறது. தொடரி எப்படி நின்றது என்றும் பூச்சியப்பன் சரோஜா காதல் என்னானது என்பதே படத்தின் முடிவு. சதா ஃபோனில் தொணத்தொணத்துத் தொந்தரவு செய்யும் ஒரு மனைவியின் குரல் படத்தில் ஒலிக்கிறது. அப்படித் தொணத்தொணப்பவர் அசிஸ்டென்ட் லோகோமோட்டிவ் பைலட்டின் (ALP) மனைவி. ஏ.எல்.பி. விதிகளை மீறி வேலை நேரத்தில் ஃபோனை அணைக்காததோடு குடிக்க வேற செய்கிறார். ஒருவரின் பொறுப்பற்றத்தனம் சுமார் 700 சொச்சம் பயணிகளின் உயிர்களைக் கேள்விகுறியாக்குகிறது. ஏ.எல்.பி.யின் நிலைக்குக் காரணம் அவருக்கு வரும் மனைவியின் ஃபோன் என்பதாகக் காட்டப்படுகிறது. இயக்குநர் பிரபு சாலமன், மைனா படத்தின் சிறை அதிகாரியின் மனைவி...