Shadow

Tag: நலன் குமாரசாமி

”சூது கவ்வும்” நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் புதிய படம்

”சூது கவ்வும்” நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் புதிய படம்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூ...
காதலும் கடந்து போகும் விமர்சனம்

காதலும் கடந்து போகும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நெட்வொர்க்கிங்கில் வேலை தேடும் யாழினியும், அடியாளாக இருக்கும் கதிரும் எதிரெதிர் வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகமும், நட்புமுமே படத்தின் கதை. வசனங்களில் நகைச்சுவை இருந்தாலும், படம் ஆங்காங்கே, குறிப்பாக முடியும் வேளையில் மனதை வருடிச் செல்கிறது. 'உனக்கொரு வாழ்க்கை உண்டு' எனச் சொல்லி, ஒருவனுக்கு மூளைச்சலவை செய்யப்படும் பொழுது, மெல்ல பதற்றம் எட்டிப் பார்க்கிறது. எல்லா மூளைச்சலவைக்கும் பின்னும் ஓர் அழகான கனவு தூண்டிலாக்கப்படும். உலகைச் சூழ்ந்துள்ள பெரும் அபாயங்களின் சிறு விதை இப்படித்தான் முளைக்கிறது. அப்படி, 'தாம் உபயோகிக்கப்படுத்தப் பட்டுள்ளோம்' என்ற உண்மையை சலவை செய்யப்பட்டவர்கள் உணரும் பொழுது ஏற்படும் வலி என்பது மிக மிகக் கொடியதாக இருக்கும். அது தன்னைப் போல் பிறருக்கும் ஏற்பட்டு விடக்கூடாதென்ற மனமிருக்கில்லையா..!? அதை கமலின் மொழியில் சொல்வதென்றால், 'அப்படிப்பட்ட மனம்...
சூது கவ்வும் விமர்சனம்

சூது கவ்வும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா நோகச் சிரிக்க வைத்துள்ளனர் 'சூது கவ்வும்' குழுவினர்.   ஆட்களைக் கடத்தி, மிரட்டி (!?) பணம் சம்பாதிக்கும் நல்ல கடத்தல்காரர் தாஸ். ஊரை விட்டு சென்னை ஓடி வந்த ஒருவனும், வேலையை இழந்த அவனது இரண்டு நண்பன்களும் தாஸுடன் இணைந்து அமைச்சர் மகனைக் கடத்துகின்றனர். அதன் பின் தாஸ் குழுவினருக்கு என்ன நடந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.   தாஸாக விஜய் சேதுபதி. 2012 இல் இறுதியில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்து அசத்திய நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை விட பல மடங்கு அசத்துகிறது இப்படம். இரண்டிலுமே நாயகனாக நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி பின் வரிசையில் நிற்கும் நபர் போலவே வருவார். எனினும் படத்தை சுமப்பவர் அவரே! கதை கேட்டு படங்களை தேர்ந்தெடுப்பதால் தான் பெரிய ஹீரோக்கள் என அறியப்படுபவர்கள் மண்ணை கவ்வும் பொழுது, விஜய் சேதுபதி திரை...