Shadow

Tag: நித்திலன்

மகாராஜா | சிறந்த இயக்குநர் விருது – நித்திலன் சாமிநாதன்

மகாராஜா | சிறந்த இயக்குநர் விருது – நித்திலன் சாமிநாதன்

சினிமா, திரைத் துளி
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் (Indian Film Festival) இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ‘சிறந்த இயக்குநர்’ விருதை வென்றுள்ளார். இந்தியத் திரையுலகில் மதிப்பு மிக்க இயக்குநர்களான கரண் ஜோஹர் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி), விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்), இம்தியாஸ் அலி (அமர் சிங் சம்கிலா), கபீர் கான் (சந்து சாம்பியன்), ராஜ்குமார் ஹிரானி (டன்கி), மற்றும் ராகுல் சதாசிவன் (பிரமயுகம்) ஆகியோரின் படங்களும் இந்தப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக நித்திலன் சாமிநாதன், "மகிழ்ச்சியில் எனக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. எங்களின் 'மகாராஜா' திரைப்படம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது எங்கள் படக்குழுவுக்கு நெகிழ்ச்சியான தருணம். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய விஜய்சேதுப...
மகாராஜா விமர்சனம்

மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை மூன்றுபேர்  அடித்துப் போட்டுவிட்டு, தன் வீட்டில் இருந்த லட்சுமியை  தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார் விஜய் சேதுபதி. லட்சுமி என்பது என்ன, அந்தப் புகாரைக் காவல்துறை ஏன் எடுத்துக் கொள்ள மறுக்கிறது, பின்னர் ஏன் அந்தப் புகாரை எடுத்துக் கொள்கிறது, அந்தப் புகாரின் பின்னால் ஒளிந்திருக்கும்  உண்மை என்ன என்பது தான் இந்த மகாராஜாவின் கதை. கதையை விரிவாகப் பேச முயன்றால் திரைக்கதையின் சுவாரசியங்கள் கெட்டுவிடும் என்பதால், கதை என்ன என்பதைப் பெரிதாக விவாதிக்காமல் காட்சிகளையும், திரைக்கதை யுக்தியையும், கதாபாத்திர வடிவமைப்பையும் பற்றி அதிகமாக விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். காட்சிகளைப் பற்றிப் பேசத் துவங்கினால், ஒவ்வொரு காட்சியுமே Half Way-இல் துவங்குகிறது. அதாவது ஒரு சம்பவத்தின் பாதியிலிருந்து காட்சி துவங்குகிறது. அதுபோல் ஒரு காட்சி துவங்கும்...