Shadow

Tag: பிரபுதேவா

மீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் “பேட்டராப்”

மீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் “பேட்டராப்”

சினிமா, திரைச் செய்தி
 90-களில் இளைஞர்களை ஆடவைத்த “பேட்டராப்” பாடலை நம்மால் மறக்க முடியாது.நடன புயல் “இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” “பிரபுதேவாவின்” அதிரடி நடனத்தில் இயக்குனர் “SJ Sinu” இயக்கத்தில்‌ “பேட்டராப்” என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்று Feb 14 பிரபலங்கள் தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டராப் திரைப்படத்தின்‌ “FIRST LOOK” போஸ்டர் பகிர்ந்துள்ளார்கள்.திரைப்படத்தைக் குறித்து இயக்குனர் SJ Sinu கூறுகையில் பிரபுதேவா உடன் ஜோடி சேர்ந்திருக்கும் வேதிகா, அவருடன் போட்டி போட்டு நடனத்தில் கலக்கியிருக்கிறார் மற்றும் இமான் இசையில் பத்து பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகளில் ஆடவைக்கும், குடும்பங்கள் கொண்டாடும் இளைஞர்களின் படமாக வந்திருப்பதாக கூறினார்.BLUE HILL FILMS BANNER-ல் ஜோபி பி சாம் தயாரிக்க, SJ Sinu இயக்கியிருக்கிறார். கதை திரைக்கதையை எழுதியிருப்பது தினி...
மை டியர் பூதம் விமர்சனம்

மை டியர் பூதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளுக்கான படம். பிரபு தேவா பூதமாக நடிக்க, பூதத்தை விடுவிக்கும் சிறுவனாக அஷ்வந்த நடித்துள்ளான். அஷ்வந்திற்கு ஒரு விபத்தில் திக்குவாய் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் கிண்டல்களுக்கு உள்ளாகும் நிலையில், சமணர் மலை அருகில் ஒரு பொம்மையில் அடைப்பட்டு இருக்கும் சிலையில் இருந்து கர்கிமுகி எனும் பூதத்தை விடுவிக்கிறான். சாபம் பெற்று பொம்மையாய் மாறிய பூதம், விடுபட்டதிலிருந்து 48வது நாளில், அஷ்வந்த் மந்திரம் சொன்னால் மட்டுமே, பூதத்தால் தன் சொந்த கிரகத்திற்குச் செல்ல முடியும். ஆனால், பூதமே அந்த உதவியை அஷ்வந்திடம் கேட்கக் கூடாது. அஷ்வந்தாகச் செய்யவேண்டும். அதெப்படி சாத்தியமானது என்பதே படத்தின் கதை. குழந்தைகளைக் கவரும் வகையில் வி.எஃப்.எக்ஸில் அசத்தியுள்ளனர் A.M.T. மீடியா டெக். வீஸ்வரூபத்தில் இருக்கும் பூதம், சுவரிலுள்ள சோட்டா பீம் போஸ்டரில் இருந்து லட்டை எடுத்துச் சாப்பிடும் பூதம், டாம் & செர்ர...
பிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2

பிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2

சினிமா, திரைத் துளி
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின் 2”. இந்தப் படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது. முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ்,விவேக் பிரசன்னா, ரவிமரியா, T.சிவா ,கிரேன் மனோகர், சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ் கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தைப் பற்றி, “என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சார்லி சாப்ளி...
விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

சினிமா, திரைச் செய்தி
‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ எனும் படத்தில் விஷாலும் கார்த்தியும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். சத்ரியன் முதலிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் K.சுபாஷ், இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இரட்டை எழுத்தாளர்களான சுபா வசனமெழுதுகின்றனர். இப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தனது ஐந்தாவது படமாகத் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இயையமைக்கிறார். இரண்டு நாயகர்கள் இணைந்து நடிக்கும் இப்படம், அமிதாப் பச்சனும் தர்மேந்திராவும் நடித்துப் பெரும்புகழ் ஈட்டிய ஹிந்திப் படமான “ஷோலே” போல் இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநரான பிரபுதேவா, “கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்பது நிறமில்லை. அஹிம்சைக்கும் வன்முறைக்கும் நடக்கின்ற போராட்டத்தைக் குறிக்கின்றது” என்றார். படத்தில் ஒரே கதாநாயகி தான். வனமகன் படத்தில் அறிமுகமாகும் சாயிஷா சைகல் தான் கார்த்திக்கிற்கு ஜோடியாக ...
தேவி தமன்னா

தேவி தமன்னா

சினிமா, திரைச் செய்தி
தேவி படம் நாயகியை மையப்படுத்தும் கதையாச்சே! நீங்க இந்தப் படத்தில் எப்படி? உங்களுக்கு ஓகேவா மாஸ்டர்?' "ரஜினி சாரே சந்திரமுகி பண்ணார். எனக்கென்ன சார்?" என பிரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குப் பதில் சொல்லியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று 'வுட்'களுக்கும் நன்றாகத் தெரிந்த பிரபு தேவாவை முதல் நாயகனாகவும்; மும்பையில் பிரபுதேவாவின் பக்கத்து வீட்டுக்காரரும், ஜாக்கி சான் படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றிருப்பவருமான சோனி சூட்-டை இரண்டாம் கதாநாயகனாகவும் நியமித்துள்ளனர் பிரபுதேவா ஸ்டுடியோஸ். ஆனால், மூன்று மொழிகளுக்கான தேவியாக யாரைத் தேர்வு செய்வதென்ற கேள்வி இயக்குநர் விஜய் முன் பிரம்மாண்டமாய் எழுந்துள்ளது. பிரம்மாண்டம் என்றால் பாகுபலி. ஆக, மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிய பாகுபலியின் குந்தலதேசத்து அவந்திகாவைத் தேவியாக்கி விடலாமென விஜய் முடிவெடுத்து, தமன்னாவிடம் கதையைச் சொல்லியுள்ளார் ...