32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் “பேட்டராப்”

Inbaaraja சேலம் Published: 14/02/2024 1 நிமிட வாசிப்பு Updated: 12/04/2024 சினிமா
எழுத்து அளவு:

 

90-களில் இளைஞர்களை ஆடவைத்த “பேட்டராப்” பாடலை நம்மால் மறக்க முடியாது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடன புயல் “இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” “பிரபுதேவாவின்” அதிரடி நடனத்தில் இயக்குனர் “SJ Sinu” இயக்கத்தில்‌ “பேட்டராப்” என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்று Feb 14 பிரபலங்கள் தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டராப் திரைப்படத்தின்‌ “FIRST LOOK” போஸ்டர் பகிர்ந்துள்ளார்கள்.

திரைப்படத்தைக் குறித்து இயக்குனர் SJ Sinu கூறுகையில் பிரபுதேவா உடன் ஜோடி சேர்ந்திருக்கும் வேதிகா, அவருடன் போட்டி போட்டு நடனத்தில் கலக்கியிருக்கிறார் மற்றும்
இமான் இசையில் பத்து பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகளில் ஆடவைக்கும், குடும்பங்கள் கொண்டாடும் இளைஞர்களின் படமாக வந்திருப்பதாக கூறினார்.


BLUE HILL FILMS BANNER-ல் ஜோபி பி சாம் தயாரிக்க, SJ Sinu இயக்கியிருக்கிறார். கதை திரைக்கதையை எழுதியிருப்பது தினில் பி.கே, ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை நிஷாத் யூஸப் கவனிக்கிறார். ஏ.ஆர். மோகன் கலை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ராபர்ட் மற்றும் பூபதி ராஜா இருவரும் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார்கள்.  விவேகாவும் மதன் கார்க்கியும் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளை தினேஷ் காசி மற்றும் விக்கி மாஸ்டர் இருவரும் வடிவமைத்து இருக்கிறார்கள்.

 

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.