Shadow

Tag: பீஷ்மர்

கர்ணன் சிறந்த நண்பனா?

கர்ணன் சிறந்த நண்பனா?

ஆன்‌மிகம், கதை
கர்ணன் கொடையாளியா? மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக் கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல். வில்லி புத்தூராரும், 'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ? கோக்கவோ?'" என்றான்; திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும், தருமமும்!' என்றான். என எழுதியுள்ளார். இதில் யார் முதல் என்று தெரியவில்லை. அதாவது துரியோதனன் மனைவி கர்ணனுடன் சொக்கட்டான் விளையாடுகிறாள். அப்போது துரியோதனன் உள்ளே வருகிறான். அவன் வருவது கர்ணனின் பின் பக்கம், அவள் பார்த்து எழுந்துவிட, கர்ணன் தோல்வி...
கர்ணனின் வீரம்

கர்ணனின் வீரம்

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) முந்தைய பகுதி: கர்ணன் துரியோதனன் நட்பு மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் நல்ல வித்தைகளைக் காட்டிவிட்டு, அல்லது வீரத்தைக் காட்டிவிடுவது அன்று. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம். பெரும்பாலோர் கூறுவது கர்ணன் துரோணரிடம் பாடம் பயிலச் சென்ற போது அவனை குலம் காட்டி துரோணர் மறுத்தார் என்பது. எவ்வளவு அப்பட்டமான பொய்? கர்ணன் துரோணாச்சாரியாரின் மாணவர்களில் ஒருவன். துரோணர் வேண்டிய குருதட்சணை, துருபதனைச் சிறையெடுத்தலாகும். கவனிக்க, கர்ணன் இங்கே துரோணரின் மாணவனாக, கௌரவர்களின் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் புறமுதுகிட்டு வருகிறான். ஆனால் பாண்டவர்கள் ஐவராகச் சென்று துருபதனைச் சிறையெடுத்து வருகிறார்கள். ஆக, கர்ணன் வீரன் என்பது இங்கே அடிபட்டுவிட்டது. கூடவே துரோணர் வில் வித்தையை கர்ணனுக்கு சொல்லித் தர மறுத்தார் என்னும் பொய்யும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. // Vaisam...