Shadow

Tag: போபோ சசி

பேய் கதை – குதூகல த்ரில்லர்

பேய் கதை – குதூகல த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. நடிகை ஆஷ் மெலோவிற்குத் தமிழில் வெளியாகும் முதற்படம் இது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, படத்தின் இசை & முன்னோட்டத்தை வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். படத்தின் இயக்குநர் ஜீன் மோசஸ், '''பேய் கதை' கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். த்ரில்லர், காமெடி, சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தப் படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு த்ரில்லிங்கான தருணமாக இருக்...

வருணன் – தண்ணீரின் அவசியமும் சாபமும்

சினிமா, திரைச் செய்தி
யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி, சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'வருணன் - காட் ஆப் வாட்டர்’ ஆகும். 'நீரின்றி அமையாது உலகு' எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகை கேப்ரியல்லா, ''வருணனைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை வைத்து எந்தவித டிராமாவும் இல்லாமல் அழகான சினிமாவை உருவாக்கி இருக்கிறோம். நாம் அனைவருக்கும் தண்ணீர் எவ்வளவு அவசியம் என்று தெரியும், ஆனாலும் தெரியாதது போல் இருக்கிறோம். இந்த வருணன் படத்தின் மூலம் தண்ணீருடைய அவசியம் பற்றி அனைவருக்கும் தெரியவரும். இந்தப் படத்தைப் பொழுதுபோக்குடன் இயக்குநர் சொல்லி...