
“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ
நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.
இயக்குநர் ராஜா மோகன், "ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது. அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது, அவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டிக் கொண்டிருந்த அவனை அண்ணாந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணாந்து பார்க்கிறேன்.
புதுப்பேட்டை படத்தில் ஒரு வசனம் வரும். அது போல, 'இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா?' என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து இப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குநரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குநராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது....









