32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தனி ஒருவன் 2 – மித்ரனின் அடுத்த குறி தயார்!

Dinesh R சேலம் Published: 28/08/2018 1 நிமிட வாசிப்பு Updated: 30/08/2018 சினிமா
எழுத்து அளவு:

thani-oruvan-2-announcement

“தனி ஒருவன்” இன்று 3 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ஹாஷ் டேக் ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாகத் தனி ஒருவனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இயக்குநர் மோகன்ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும், ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார்கள். ‘தனி ஒருவன் 2’ படத்தை விரைவில் தொடங்கவுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த உற்சாகமான தருணத்தைப் பற்றி இயக்குநர் மோகன் ராஜா கூறும்போது, “தனி ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்தத் ‘தனி ஒருவன் 2’ மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்களுடன் பேசி வருகிறோம். சமூகப் பின்னணியில் அமைக்கப்படிருக்கும் இந்தத் தனி ஒருவன் 2 கதையில், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் துரத்தல் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமான முறையில் இருக்குமாறு முயற்சித்து வருகிறோம்” என்றார்.

முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ஜெயம் ரவி தனி ஒருவன் 2ஆம் பாகத்திலும் நாயகனாகத் தொடர்கிறார். புதிய சவால்களையும், மோதல்களையும் இந்தப் படத்தில் சந்திக்கத் தயாராகி வருகிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.