Shadow

Tag: மோடி

சர்வ அலட்சியமும் சர்வாதிகாரமும்

சர்வ அலட்சியமும் சர்வாதிகாரமும்

அரசியல், கட்டுரை, சமூகம்
நாட்டுக்காக மக்களா? மக்களுக்காக நாடா? என்ற கேள்விக்கு, 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் வரிகளைப் பதிலாகக் கொள்ளலாம். மோடி அரசோ, அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய பயத்தையும் பதற்றத்தையும், தனி மனிதன் பலருக்கும் உருவாக்கி வைத்துள்ளது. ‘வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity)’ என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு மொழி, மதம், சடங்கு, உணவு வேறுபாட்டினைக் குறிக்கும் பதம் மட்டுமன்று, மக்களின் பொருளாதார அடுக்கினையும் சேர்த்தே குறிக்கிறது. அதிகாரத்தோடு நெருங்கிப் பழகும் மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் (Crony capitalists) முதல் தினக் கூலியை (Daily wages) நம்பிப் பிழைக்கும் அன்றாடங்காச்சிகள்/கழைக்கூத்தாடிகள் வரை எண்ணற்ற அடுக்கினைக் கொண்டது. இந்த அடுக்குகளைப் பற்றிப் போதிய ஞானம் இல்லாமல், அடுக்கின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு, 2 நாட்களில் நாட்டை வெளுக்க அரசு ஓர் அ...