துணிவு விமர்சனம்
'யுவர் வங்கி'க்குள் நுழைந்து துணிகர கொள்ளையில் ஈடுபடுகிறார் டார்க் டெவில் எனும் சர்வதேசக் குற்றவாளி. ஆனால் டெவிலின் நோக்கம், பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமன்று எனப் புரிந்து கொள்கிறார் டிஜிபி தயாளன். டார்க் டெவில் யார், அவரது நோக்கமென்ன என சுவாரசியமாகக் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் ஹெச். வினோத்.
பத்திரிகையாளர் மைபாவாக வரும் மோகனசுந்தரம் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை உதாசீனப்படுத்திவிட்டு, நொடியில் பத்து லட்சம் பணம் பார்க்கும் அவரது சந்தர்ப்பவாதத்தின் மூலமாக, மீடியாவின் இன்றைய போக்கை நயமாகக் கேலி செய்துள்ளார் இயக்குநர். வங்கியைக் கொள்ளையடிக்க இறங்கும் முதல் குழுவின் தலைவனாக ராஜதந்திரம் படத்து நாயகன் வீரா நடித்துள்ளார். வங்கிக்கு வெளியில் இருந்து அஜித்திற்கு உதவும் கண்மணியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். நாயகனுக்குச் சமமாகக் குண்டடிகள் பெற்றும், அதை மீறி சாகசம் செய்...