Shadow

Tag: லிங்குசாமி

“பாட்டல் ராதா | சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம்” – வெற்றிமாறன்

“பாட்டல் ராதா | சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம்” – வெற்றிமாறன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் ‘பாட்டல் ராதா’ ஆகும். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர்.லிங்குசாமி, “இந்தப் படம் தமிழில் மிகச் சிறந்த படமாக, இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான ஒரு படமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதே சமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது. இந்தப் படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல . அவசியமானதொரு படம். இந்தப் படம் பெரும் வெற்றியடையும்” என்றார்.அமீர், “இந்த கதையைப் போல குடி நோயால் பாதிக்க...
கொட்டுக்காளி – உலக சினிமாவின் அடையாளம் | இயக்குநர்கள் புகழாரம்

கொட்டுக்காளி – உலக சினிமாவின் அடையாளம் | இயக்குநர்கள் புகழாரம்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’ ஆகும். இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலையரசு, “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. கூழாங்கல் படம் பார்த்ததும் நாங்கள் வினோத்துடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தோம். ‘கொட்டுக்காளி’ மூலம் அது நடந்துள்ளது. வினோத்ராஜ், சூரி, அன்னா பென் என அனைவரும் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினரும் நன்றாக வேலை செய்திருக்கின்றனர். படம் நிச்சயம் பேசப்படும்” என்றார். படத்தொகுப்பாளர் கணேஷ் சிவன், “இது நம் ஊரின் ...
“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

சினிமா, திரைச் செய்தி
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் ஷங்கர் அவ்வளவு ஒற்றுமையுடன் அணியை எடுத்துச் சென்றார். ஜிவி பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வார்” என்றார். இசையமைப்பாளர் ரேவா, “ 'கள்வன்' படம் எங்கள் எல்லோருக்குமே ஸ்பெஷல் படம். என்னை நம்பி இசையமைக்க வாய்...
தி வாரியர் விமர்சனம்

தி வாரியர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்ப் படங்களில் நாயகனாக நடிக்கவேண்டுமென ஆசைப்பட்டவர் ராம். ஆனால், ராம் பொத்தினேனியாக தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருபது வருடக் காத்திருப்புக்குப் பிறகு, தமிழில், நாயகனாக அறிமுகமாகியுள்ளார் ராம். லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. அவரது இரண்டாவது இன்னிங்ஸிற்கான தொடக்கமாக இப்படம் அமையுமென எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவரான சத்யா, மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றலாகி வருகிறார். மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரு எனும் ரெளடிக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளிக்கிறார் சத்யா. குரு, சத்யாவை நையப்புடைத்துத் தொங்க விட்டுவிடுகிறார். உயிர் பிழைக்கும் சத்யா, ஐபிஎஸ் அதிகாரியாக மதுரை வருகிறார். குருவின் சாம்ராஜ்ஜியம் நிர்மூலமாகிறது. கமர்ஷியல் ஃப்ளேவர்கள் இல்லாமல் படம், புஜ பல பராக்கிரமசாலியான குருவிற்கு...
சண்டக்கோழி 2 விமர்சனம்

சண்டக்கோழி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2005 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சண்டக்கோழி. சண்டைக்கு முந்தி நிற்கும் ஆளெனத் தலைப்பைப் பொருள் கொள்ளலாம். ஒரு கொலையால், வேட்டைக் கருப்புக் கோவிலின் திருவிழா ஏழு வருடங்களாக நடைபெறாமல் தடைப்படுகிறது. மீண்டும் அத்திருவிழா நடைபெற்றால், அன்பு எனும் இளைஞனைத் திருவிழாவில் வைத்துக் கொல்ல, வரலக்‌ஷ்மி குடும்பத்தினர் காத்திருகின்றனர். அன்புவையும் காப்பாற்றி, திருவிழாவையும் எப்படி ராஜ்கிரணும் விஷாலும் நடத்துகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு மீரா ஜாஸ்மின் மிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்துக் கொண்டு, கீர்த்தி சுரேஷை மீரா ஜாஸ்மின் ஆக்கிடப் படாதபாடு பட்டுள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் தூக்கி வீசிடுவேன் என்ற மதமதப்போடே வளைய வருகிறார் விஷால். எப்படியும் அனைவரையும் துவம்சம் செய்துவிடுவார் என்று ரசிகர்களுக்குத் தெரியாதா? அதைச் சுவாரசியமாகச் சொல்லவேண்டாமா?...