ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி” பந்தம்
மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் முதன்முறையாக பாலிவுட்டின் முதன்மை நடிகரான ஷாருக்கானுக்கும் தென்னிந்திய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய உறவை உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணம் தென்னிந்திய கலாச்சார உடையான லுங்கியை முதன்மைப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும் நடனமும் அமைந்திருந்தது தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பையும், தென்னிந்திய ரசிகர்களிடம் அது சென்றடைந்த வீச்சையும் பார்த்தோ என்னவோ மீண்டும் ஒரு முறை ஷாருக்கான் தன் படத்தின் பாடலில் லுங்கியை கையில் எடுத்திருக்கிறார்.ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, கெளரி கான் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஜவான்”. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதிய...