Shadow

Tag: வாத்து

வாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை

வாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை

கட்டுரை, சமூகம்
நீரிலும், நிலத்திலும் வாழும் பறவை இனம் இந்த மல்லார்ட் வாத்துகள். பனிக்காலத்தில் உறைந்த குளங்களின் மேல் வழுக்கிக் கொண்டு நடந்து செல்வதும், கூட்டமாக நெருங்கி நின்று பனிக்காற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதும், சில பறவைகள் தெற்கு நோக்கிப் பறந்து போவதுமாய்க் கடும் குளிர், பனி, வெயில், மழையிலிருந்து இவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் அதன் இறக்கைகளே கவசங்களாக இருக்கிறது. ஆறுகள், ஏரி, குளங்களென நீர்நிலைகள் தோறும் இவற்றைக் காண முடிகிறது. பல வண்ணங்களில் பெண் வாத்துகளைக் கவரும் வண்ணம் வசீகரமாக ஆண் வாத்துகள். அதற்கு நேர்மாறாகப் பெண் இனங்கள். ஜோடியாகவே சேர்ந்து திரியும் வாத்துக் கூட்டம் மழைக்கால முடிவில் ஆண் வாத்துகள் மட்டுமே தனியாகச் சுற்றிக் கொண்டிருக்க, பெண் வாத்துகள் ஒன்று அல்லது இரு வாரங்களுக்குத் தினம் ஒரு முட்டையிட்டு அடைகாத்து ஒரு மாதத்திற்குள் குஞ்சு பொரித்து விடுகிறது. கோடைக்காலத்தில் தன் கு...