ஹனுமான் விமர்சனம்
பிறப்பிலிருந்தே தான் ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என்று வெறி கொண்டு அலையும் ஒரு கதாபாத்திரம். பிறப்பிலிருந்தே எந்தவொரு நோக்கமும் இன்றி தான் தோன்றித்தனமாக அலைந்து திரியும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு எதிர்பாராத விதமாக சூப்பர் ஹீரோவின் சக்தி கிடைக்கிறது. இந்த இரு நேரெதிர் கதாபாத்திரமும் அந்த சக்திக்காக மோதிக்கொள்ளும் மோதலே இந்த “ஹனுமான்” திரைப்படம்.இந்திய மொழித் திரைப்படங்களும் இந்த இருபதாம் நூற்றாண்டில் சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரமிப்பூட்டும் காட்சிகளை படைக்கத் துவங்கி இருக்கும் இந்த நேரத்திலும், அயோத்தியில் ராமர் கோவில் திறக்க இருக்கும் நேரத்திலும் இந்த ‘ஹனுமான்’ திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பாகுபலி தொடங்கி ஆதிபுருஷ் திரைப்படம் வரை சிஜி தொழில்நுட்பத்துடனும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துடனும் கற்பனையான காட்சிகளை திரைக்கு கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ...