அங்காரகன் விமர்சனம் :
மலை கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு ரெசார்ட் இயங்கி வருகிறது. அந்த ரெசார்ட்டுக்கு தன் நண்பர்களோடு வந்து தங்கியிருக்கும் ஒரு இளம் பெண் காணாமல் போய்விட்டாள் என்று தேடத் துவங்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அங்கு தங்கி இருப்பவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட, அவர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட, அந்த ரெசார்ட்டில் இன்னொரு பெண்ணும் காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய நிகழ்வுகளும் அங்கு நடக்க, முடிவில் என்ன ஆனது, காணாமல் போன பெண்களுக்கு என்ன நடந்தது என்பதே அங்காரகனின் கதை.
ரெசார்ட்டில் இரண்டு பெண்களோடு தங்கும் ஒரு இளைஞன். இந்த இரண்டு பெண்களில் ஒருத்தி தான் கதையின் ஆரம்பத்தில் காணாமல் போவது. இவர்கள் சுற்றுலாவிற்கு வந்தவர்கள். ஒரு கணவன் மனைவி ஜோடி, இருவருமே அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை போக்கி...