தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் படப்பிடிப்பு முடிந்தது
பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஹனுமான்' படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்புத் தளத்தின் காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டனர்.
படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காகவும், படத்தின் தரத்திற்காகவும் கடுமையாக உழைத்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பையும் பெற்றது. அனுமன் ஜெயந்தி தினத்தன்று வெளியிடப்பட்ட ...