
ராமம் ராகவம் விமர்சனம்
ராமாயணத்தில், தசரதனின் ஆக்ஞையை ஏற்று வனவாசம் சென்றார் ராகவன். இப்படத்தில், ராகவனுக்காக அசாத்தியமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறார் தசரதன்.
தசரத ராமன் எனும் நேர்மையான அரசு அதிகாரிக்கு, ராகவன் எனும் சூதாடி மகன். மகனை உயிருக்கு உயிராக நேசிக்கும் தந்தைக்கும், அப்பாவை உள்ளூற மிகவும் வெறுக்கும் மகனுக்கும் இடையேயான சிக்கலான உறவை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டுள்ளது ராமம் ராகவம் படம். இப்படத்தின் கதை, 'விமானம்' படத்தின் இயக்குநர் சிவபிரசாத் யானாலா-வுடையதாகும்.
தனராஜ் கொரனானியின் முதற்படம் எனச் சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகப் படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி – பிரமோதினியின் ஜோடியின் மகனாக அவர் ஒட்டாமல் அந்நியமாக அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் இல்லாமல் தனித்துத் தெரிகிறார். எனினும் சூதில் பெருவிருப்பம் கொண்ட ஊதாரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். பார்வையாளர்களின் கோபத்திற்க...