Shadow

Tag: ஹவுஸ் ஓனர் திரைப்படம்

ஹவுஸ் ஓனர் விமர்சனம்

ஹவுஸ் ஓனர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்து, கரையோரம் இருந்த வீட்டிற்குள் எல்லாம் 12 அடி உயரத்துக்கும் மேலாகத் தரைத்தளத்தையே மூழ்கடிக்கும் அளவுக்கு நீர் புகுகிறது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான வெங்கடேசனும், அவர் மனைவி கீதாவும் வீட்டிற்குள் சிக்கிக் கொள்கின்றனர். வீட்டு வாசற்கதவைத் திறக்கும் சாவியோ தண்ணீரில் எங்கோ விழுந்து விடுகிறது. முட்டி, தொடை, இடுப்பு, மார்பு, கழுத்து என நீரின் அளவோ உயர்ந்து கொண்டே இருக்கிறது. கட்டில் மீது, நாற்காலி போட்டு அதன் மேலேறி நின்றாலும், கூரை வரை நிரம்பிவிடும் நீரிலிருந்து அவர்களால் தப்ப இயலவில்லை. 2 டிசம்பர் 2015 அன்று, நிர்வாகச் சீர்கேட்டினால் நேரிட்ட செயற்கை வெள்ளத்தால் ஏற்பட்ட எண்ணற்ற அவலங்களில் ஒன்றான இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் - ஹவுஸ் ஓனர். அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான வாசுதேவனுக்கு, தான் ஆசையாகக் கட...