Shadow

Tag: அட்சய திருதியை

அட்சய திருதியையின் அரசியல்

அட்சய திருதியையின் அரசியல்

கட்டுரை, சமூகம்
லட்சங்களைக் கொட்டிய விளம்பரங்கள். அழகிய பெண்களின் ஜொலிக்கும் நகை அலங்காரங்கள், அணிவகுப்புகள். மாயப்பேச்சுக்கள். மயக்கும் சலுகைகள். தள்ளுபடிகள், தவறவிடாதீரெனச் செல்லமாய் மிரட்டும் பிரபலங்கள். அடுத்த சில தினங்களுக்கு இந்த அட்சயதிரிதியை அத்துமீறல்கள் இன்னும் ஆர்ப்பாட்டமாய் இருக்கும். ஒன்றுமில்லாதவைகளை ஊதிப் பெருக்கி ஏதோ வாரது வந்த வாய்ப்பு என்பதைப்போல நுகர்வோரை நம்பவைக்கும் மூளைச்சலவைதான் நுகர்வு கலாச்சாரத்தின் மிகப்பெரிய சாபக்கேடு. இதனால் நுகர்வோருக்கு சின்ன எலும்புத்துண்டுகளும், கார்பப்ரேட் கயவாளிகளுக்கு கொள்ளை லாபமும் சர்வ நிச்சயம். சித்திரை மாத அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் அட்சயதிருதியை தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழில் மொழிபெயர்த்தால் அள்ள அள்ள குறையாத நாள் எனப் பொருள் கொள்ளலாம். இந்த நாளுக்கு நிறைய புராண கதைகள் இருந்தாலும், அடிப்படையில் இந்த நாளின் நல்ல எண்ணங்கள், செயல்கள், சி...