Shadow

Tag: அம்ரிதா

லிஃப்ட் விமர்சனம்

லிஃப்ட் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
விஜய் டிவியின் 'பிக் பாஸ்' புகழ் கவின் நாயகனாக நடித்துள்ள 'லிஃப்ட்' திரைப்படத்தினை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அலுவலகத்தில் தனது முதல் நாள் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் குரு பிரசாத், லிஃப்டில் மாட்டிக் கொள்கிறான். அமானுஷ்ய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகித் தப்பிக்க வழியின்றித் திணறிக் கொண்டிருக்கும் குரு பிரசாத்துடன், மனிதவள மேலாளரான ஹரினியும் சேர்ந்து சிக்கிக் கொள்கிறாள். இருவரையும் பாடாய்ப்படுத்தும் அமானுஷ்ய சக்தி எது, அதிலிருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. ஒரு லிஃப்ட்க்குள் நடக்கும் கதையைப் பார்ப்பவர்கள் சலிப்படையாதவாறு மிகச் சிறப்பான பணியினைப் புரிந்துள்ளார் ஒளிப்பதிவாளர் யுவா. கவினின் வெளிறிய முகம், லிஃப்ட், லிஃப்ட் பட்டனைக் கொண்டே படத்தொகுப்பாளர் G.மதன், காட்சிகளை விறுவிறுப்பாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளர...
காளி விமர்சனம்

காளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது கனவிற்கும், தனது சிறு வயது இந்திய வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென அதைக் கண்டுபிடிக்க, இந்தியா வருகிறார் பரத். அவரது கனவிற்கான புதிருக்கும், கடந்த கால வாழ்க்கை பற்றிய அவரது தேடலுக்கும் விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு. படத்தின் தொடக்கமே எரிச்சலூட்டுவதாய் அமைகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் சிறுநீரகம் தரும் டோனர் (Donor), ரத்தச் சம்பந்தமுள்ள உறவாக இருக்கவேண்டுமெனச் சொல்கிறார்கள். என்ன கொடுமை இது? படத்தின் க்ளைமேக்ஸிலும் இது போன்றதொரு லாஜிக்கை அழுத்தமாக வலியுறுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது. நாயகன் எடுத்து வளர்க்கப்படும் வளர்ப்பு மகன் என அவனது பெற்றோர்கள் நாயகனிடம் சொல்லவும், தாய் சென்ட்டிமென்ட்டிற்காகவும் திணிக்கப்பட்ட அந்தப் பிற்போக்குத்தனமான லாஜிக் மிகக் கொடூரம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் வளர்ந்...
படைவீரன் விமர்சனம்

படைவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆண்ட பரம்பரை என்ற பெருமையைத் தலையில் சுமந்தவாறு திரியும் முனீஸ்வரன், படைவீரனாய்க் காவல்துறையில் சேருகிறான். 'சாதிக்கு ஒன்னுன்னா பெத்த தாயைக் கூடக் கருவறுப்பேன்' என்று நாயகனின் நண்பன் சொல்வான். இவ்வசனத்தை, படத்தின் ஒரு வரிக்கதையாகக் கொள்ளலாம். படம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தொடுகிறது. அது சாதிப்பற்று மனிதத்தன்மையை அழித்து எப்படி வெறியாகப் பரிணமிக்கிறது என்பதே! ஊரிலேயே இருக்கும் இளைஞர்களுக்கும் மத்திம வயது பெண்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பழமையில் ஊறிய தலைவனுக்கும் அவ்வெறி நிறைந்துள்ளது. தன் சகோதரியை ஊர்ப் பெண்கள் கூடிக் கொலை செய்யும் பொழுது, அந்த அண்ணனுக்கு எந்தப் பதற்றமும் எழுவதில்லை. சாதிப் பெருமையைக் காப்பது தான் தங்கள் தலையாயக் கடமையெனக் கருதிக் கொலை செய்யும் பெண்களுக்கோ எந்தக் குற்றயுணர்ச்சியுமில்லை! 'உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா?' என்று தலைவராக வரும் கவிதா பாரதியின் கேள்வி...