Shadow

Tag: ஆதவ் கண்ணதாசன்

முதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத்

முதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத்

சினிமா, திரைத் துளி
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீஸன் ஒன்றில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாளராகக் கலந்து கொண்டவர்கள் ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் குரங்கு பொம்மை  இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவைக் கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தைப்...