32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

இசையமைப்பாளர் சாம் CS

14 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
Immortal விமர்சனம் இது புதிது முக்கியச் செய்தி
04/09/2026 Dinesh R 2 நிமிட வாசிப்பு

Immortal விமர்சனம்

இம்மார்ட்டல் என்றால் இறப்பற்றவர் எனப் பொருள் கொள்ளலாம். மஹி எனும் இளைஞனுக்கு, தனது வீட்டில் ஓர் அறையைக் குறைந்த விலையில் உள்வாடகைக்கு விடுகிறார் அழகான யுவதியான சிந்து. சிந்துவால் மிகவும் கவரப்படும் மஹி, சிந்துவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால், அந்த வீட்டை விட்டுத் தன்னால் என்றைக்கும் வெளியேற முடியாதபடி சிந்துவால் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற விபரீத உண்மை மெல்ல மஹிக்குப் புரியத் தொடங்குகிறது. சிந்து யார், அவர் ஏன் மஹியைச் சிறைப்பிடித்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை. மஹிக்கு […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
ரத்தத்த தா – டிமான்டி காலனி 3 படத்தின் முதற்பாடல் Songs

ரத்தத்த தா – டிமான்டி காலனி 3 படத்தின் முதற்பாடல்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகியுள்ளது. இப்பாடல் இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது அசத்தலான குரலில் […]

03/08/2026 Dinesh R
பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review இது புதிது

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான். மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் […]

03/07/2025 Dinesh R
Surya Sethupathi: தமிழ் சினிமாவின் டைகர் ஷெராஃப் | பீனிக்ஸ் – வீழான் சினிமா

Surya Sethupathi: தமிழ் சினிமாவின் டைகர் ஷெராஃப் | பீனிக்ஸ் – வீழான்

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேகா, “மற்றவர்கள் படத்திலேயே அதிரடியான சண்டைக் காட்சிகள் வைக்கும் அனல் அரசு அவர்கள் தன்னுடைய படத்தில் இன்னும் சிறப்பாக வைத்துள்ளார். சாம் சி.எஸ் அவர்கள் பிரமாதமாக இந்தப் படத்திற்கு […]

28/06/2025 Dinesh R
மெட்ராஸ்காரன் – இருவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆக்‌ஷன் த்ரில்லர் இது புதிது

மெட்ராஸ்காரன் – இருவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆக்‌ஷன் த்ரில்லர்

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி […]

25/07/2024 Dinesh R
இடி மின்னல் காதல் – மனநலம் பற்றிப் பேசும் படம் சினிமா

இடி மின்னல் காதல் – மனநலம் பற்றிப் பேசும் படம்

பாவகி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’ ஆகும். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளரும் இயக்குநருமான பாலாஜி மாதவன், “பி.வாசு அங்கிள் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவில் […]

22/03/2024 Dinesh R
“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங் சினிமா

“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளைக் கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் […]

26/11/2023 Dinesh R
“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர் Songs

“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

அமேசான் பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’-இற்காக சாம் சி.எஸ் இசையமைத்த ‘துவா துவா..’ எனத் தொடங்கும் பாடலில், பாடகர்கள் ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ‘ராப்பர்’ அறிவு ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் எழுதி உருவாக்கப்பட்ட தொடர் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் […]

14/06/2022 Dinesh R
100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா சினிமா

100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்தப் படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சிஎஸ் பதம்சந்த் ஜெயின். “சாம் ஆண்டன் உடன் நான் இணையும் மூன்றாவது படம் 100. முந்தைய இரண்டு படங்களும் நகைச்சிவைப் […]

02/05/2019 Dinesh R
வஞ்சகர் உலகம் விமர்சனம் சினிமா

வஞ்சகர் உலகம் விமர்சனம்

வஞ்சகர் சூழ் உலகிற்கு, சமூகத்தின் சில பிற்போக்குத்தனமான பார்வைகளும், பகுத்தறிவற்ற நம்பிக்கைகளும், காலாவதியான சட்டங்களுமே காரணமாக அமைகின்றன என்பது மிகவும் துரதிர்ஷ்டம். காலமாற்றமும் அதற்குத் தோதான சட்டங்களும், சக மனிதன் மீதான பார்வையை, மேலும் கரிசனத்துடனும் நட்புடனும் மாற்றும் என நம்புவோமாக! படம் மெதுவான தாள லயத்தில் பயணிக்கிறது. இந்த லயத்திற்கு, இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் என்பது மிக நீண்ட நேரமாய்த் தோற்றமளிக்கிறது. போதைப்பொருள், மணி லாண்டரிங் போன்ற சட்டவிரோத செயல்களை நிழலில் இருந்து […]

07/09/2018 Dinesh R
லக்ஷ்மி விமர்சனம் சினிமா

லக்ஷ்மி விமர்சனம்

பிரபுதேவாவைக் கொண்டு ஒரு நடனப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்ற சிறு பொறி லக்‌ஷ்மியாக வளர்ந்துள்ளது. லக்‌ஷ்மி எனும் சிறுமிக்கு நடனம் என்றால் உயிர். எங்கும் எப்பவும் நடனம். தனது அம்மாவிற்குத் தெரியாமல், மும்பையில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்து கொள்கிறாள். லக்‌ஷ்மியின் கனவு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதாநாயகியாக சிறுமி தித்யா. பேருந்து நிறுத்தத்தில், சாலையில், குளியலறையில், பள்ளியில், பேருந்தில், டீக்கடையில் (Cafe’teria) என ஆடிக் கொண்டே இருக்கிறார். தெய்வத்திருமகளில் சாரா, தியாவில் வெரோனிகா என […]

25/08/2018 Dinesh R
கடிகார மனிதர்கள் விமர்சனம் சினிமா

கடிகார மனிதர்கள் விமர்சனம்

ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு மகள், இரண்டு மகன், கணவன், […]

03/08/2018 Dinesh R
சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா சினிமா

சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு சிலரே! அந்த வரிசையில் சாம் C.S. மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களைத் தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம். வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை […]

28/07/2018 Dinesh R
சாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர் சினிமா

சாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்

விக்ரம் வேதாவில் கலக்கிய இசையமைப்பாளர் சாம் CS தான் ‘லைக்காவின் கரு’ படத்திற்கு இசையமைத்துள்ளார். தனது படத்தின் இசையில் அதிக கவனம் செலுத்தும் இயக்குநர் விஜய் பேசுகையில், ” சமீப காலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS தான். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாகப் புரிந்து கொண்டு அசத்துபவர் அவர். இந்தப் படத்தின் அவரது பாடல்கள், எனது எல்லாப் படங்களையும் விட மிகச் சிறந்த பாடல்களைக் கொண்டதாக நிச்சயம் அமையும். ‘லைகாவின் கரு’ […]

02/03/2018 Dinesh R