Shadow

Tag: இயக்கநர் லோஹித்

படைவீரன் விமர்சனம்

படைவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆண்ட பரம்பரை என்ற பெருமையைத் தலையில் சுமந்தவாறு திரியும் முனீஸ்வரன், படைவீரனாய்க் காவல்துறையில் சேருகிறான். 'சாதிக்கு ஒன்னுன்னா பெத்த தாயைக் கூடக் கருவறுப்பேன்' என்று நாயகனின் நண்பன் சொல்வான். இவ்வசனத்தை, படத்தின் ஒரு வரிக்கதையாகக் கொள்ளலாம். படம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தொடுகிறது. அது சாதிப்பற்று மனிதத்தன்மையை அழித்து எப்படி வெறியாகப் பரிணமிக்கிறது என்பதே! ஊரிலேயே இருக்கும் இளைஞர்களுக்கும் மத்திம வயது பெண்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பழமையில் ஊறிய தலைவனுக்கும் அவ்வெறி நிறைந்துள்ளது. தன் சகோதரியை ஊர்ப் பெண்கள் கூடிக் கொலை செய்யும் பொழுது, அந்த அண்ணனுக்கு எந்தப் பதற்றமும் எழுவதில்லை. சாதிப் பெருமையைக் காப்பது தான் தங்கள் தலையாயக் கடமையெனக் கருதிக் கொலை செய்யும் பெண்களுக்கோ எந்தக் குற்றயுணர்ச்சியுமில்லை! 'உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா?' என்று தலைவராக வரும் கவிதா பாரதியின் கேள்வி...
தமிழ் ‘மம்மி’ – ஹாரர் த்ரில்லர்

தமிழ் ‘மம்மி’ – ஹாரர் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
நீண்ட இடைவெளிக்குப் பின் ஹாரர் த்ரில்லர் மூலம், மீண்டும் நடிக்க வந்துள்ளார் அஜித், விக்ரம் படங்களில் நாயகியாக நடித்த ப்ரியங்கா த்ரிவேதி. இந்தப் படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜயின் ஸ்ட்ராபெர்ரி, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா. இவர்களுடன் கிறிஸ்துவப் பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார். கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப் படத்தின் கதை. ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்க...