
நிவின் பாலியின் “சர்வம் மாயா” – புதிய போஸ்டர்
நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான உலகை அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.“சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்கக் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரசியமான முகபாவனைகள், அனைத்துத் தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிற...


