Shadow

Tag: இயக்குநர் கெளரவ் நாராயணன்

நிர்வாகம் பொறுப்பல்ல – மோசடி பேர்வழிகளிடம் உஷார்

நிர்வாகம் பொறுப்பல்ல – மோசடி பேர்வழிகளிடம் உஷார்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும் நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இவ்விழாவில் பேசிய நடிகர் பிளாக் பாண்டி, ''நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்குக் கட்டணம் செ...
“ரசிகர்களை அறிவாளியாளியாக நினைத்துப் படமெடுத்தால் வெற்றி பெறலாம்” – இயக்குநர் கெளரவ் நாராயணன்

“ரசிகர்களை அறிவாளியாளியாக நினைத்துப் படமெடுத்தால் வெற்றி பெறலாம்” – இயக்குநர் கெளரவ் நாராயணன்

சினிமா, திரைச் செய்தி
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விறுவிறுப்பான த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இப்படம், ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் B.T. அரசகுமார், ''அண்ணன் கே. ராஜன் வந்தவுடன் 'கயிலன்' படத்தின் கதை என்ன, க்ரைம் ஸ்டோரியா, ஃபேமிலி ஸ்டோரியா எனக் கேட்டார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித்துளிகள் அங்குச் சென்றேன்....
விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன்

விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன்

சினிமா, திரைத் துளி
கதையின் தன்மையையும், திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து தனது இயக்கத்திறமையால் அழுத்தமும் அழகும் அடங்கிய திரைப்படமாக உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் கௌரவ் நாராயணன். எதார்த்த வாழ்வியலுக்குத் “தூங்கா நகரம்”, காவல்துறையின் கன்னியத்திற்குச் “சிகரம் தோடு", தீவரவாத்திற்கு எதிராக “இப்படை வெல்லும்” எனப் படத்திற்குப் படம் வித்தியாசம் கொண்ட கதை களங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றியும் கண்டவர் இயக்குநர் கௌரவ் நாராயணன். இயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் கவனம் செலுத்தித் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். விரைவில் புதிய படத்தின் அறிவிப்பின் மூலம் தனது அடுத்த படைப்பின் விவரத்தை விரைவில் அளிக்கவுள்ளார் கௌரவ் நாராயணன்....
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, 'சோட்டா ராஜ்' எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை. மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, பரோட்டா சூரியின்  ஒரே மாதிரியான, பார்ப்பவர்களை  இம்சிக்கும் நடிப்பை முடிந்த அளவு மாற்றி, சூரியையும் ரசிக்கும்படி திரையில் காட்டியிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். காமெடியனாக அவரது பாத்திரத்தை மட்டுபடுத்தி இருந்தாலும், நல்லதொரு துணை நடிகராக அவரை உபயோகப்படுத்தி இருப்பது சிறப்பு. இப்படத்தில் எந்த வேடத்தை யார் ஏற்றிருந்த...
இப்படம் ஜெயிக்கும்

இப்படம் ஜெயிக்கும்

சினிமா, திரைச் செய்தி
‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, “முதல் முறையாக நான் உதய் கூட நடிக்கிறேன். புதுசா நடிக்க வர்றப்ப ஒரு பயம் இருந்திருக்கும். ஆனா இப்ப நல்லா நடிக்கிறார். மானிட்டர் பார்த்து, சரியா நடிச்சிருக்கேனே எனப் பார்த்து சரி பண்ணிக்கிறார். எனக்கு மானிட்டர் பார்க்கும் பழக்கமில்லை. ஏன்னா எண்பதுகளில் நாங்க நடிக்கிறப்ப மானிட்டரோ கேரவனோ இல்லை. நான் பஸ் ஓட்டணும் எனச் சொன்னாங்க. நான் ஏன் பஸ் ஓட்டணும்? டூப் போட்டு எடுத்துக்கலாம்லன்னு கேட்டேன். இல்ல, அதுஒரு ஸ்ட்ராங் கேரக்டர் நீங்க தான் பண்ணணும்னு கெளரவ் சொன்னார். ‘உங்களுக்காக இந்தக் கேரக்டரை இப்படிச் செஞ்சிருக்கோம்!’ என ஒரு டைரக்டர் சொல்றப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப பெருமையாகவும் இருக்கு. அவர் கேட்டதால், நானே பஸ் ஓட்டிட்டேன். கொஞ்சம் பக்கு பக்குன்னு இருந்தது. ஏன்னா என்னை நம்பி பஸ்சில் 20 பேர் உட்கார்ந்தாங்க...
லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்

லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்

சினிமா, திரைத் துளி
படத்திற்குப் படம் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்தெடுத்து இயக்கும் இயக்குநர் கௌரவ் நாராயணன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியது. இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்குப் படக்குழுவினர் சென்றது குறிப்பிடத்தக்கது....